Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 25/10/2019

இன்றைய நாள் எப்படி 25/10/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 8ம் தேதி, ஸபர் 25ம் தேதி,
25.10.19 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி, மாலை 4:41 வரை,
அதன்பின் திரயோதசி திதி, பூரம் நட்சத்திரம் காலை 9:01 வரை;
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9 : 00 – 10 : 30 மணி
ராகு காலம் : காலை 10 : 30 – 12 : 00 மணி
எமகண்டம் : பகல் 3 : 00 – 4 : 30 மணி
குளிகை : காலை 7 : 30 – 9 : 00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சதயம்
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர், மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம் : உறவினரின் மாறுபட்ட செயல் வியப்பை தரலாம். தொழில், வியாபாரத்தில் நிதான அணுகுமுறை நல்லது. பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

ரிஷபம் : உங்கள் மனம் விரும்பாத நிகழ்ச்சியில் ஒதுங்கி இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். சேமிப்பு பணம் அத்தியாவசியமான செலவுகளுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு வேண்டும்.

மிதுனம் : உங்கள் மனதில் இருந்த தயக்கம் விலகும். செயல்களில் கூடுதல் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கடகம்: முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு உதவும். பணவரவு சராசரி அளவில் கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு பணிகள் பயணத்தை எளிதாக்கும்.

சிம்மம் : இஷ்ட தெய்வ அனுகூலத்தினால் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவதால் ஒற்றுமை வளரும்.

கன்னி : உங்களின் இரக்க குணத்தை சிலர் ஏளனம் செய்வர். முக்கியமான பணி அதிக முயற்சியினால் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். நீண்ட துார பயணங்களில் பாதுகாப்பு பின்பற்றவும்.

துலாம்: உங்கள் மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: எந்த செயலையும் சவாலாக அணுகுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். உபரி பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

தனுசு: எவருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண கூடாது.

மகரம் : பணி நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்க உதவும்.

கும்பம் : பெரியவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவீர்கள். உங்களின் பொறுப்பான செயல் பாராட்டு பெறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து கூடுதல் பணவரவு கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

மீனம் : கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகின்ற இடையூறு இஷ்ட தெய்வ அருளால் விலகும். சராசரி பணவரவுடன் நிலுவை பணமும் வசூலாகும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: