Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 25/09/2019

இன்றைய நாள் எப்படி 25/09/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 8ம் தேதி, மொகரம் 25ம் தேதி,
25.9.19 புதன்கிழமை தேய்பிறை, ஏகாதசி திதி காலை 10:05 வரை
அதன் பின் துவாதசி திதி, ஆயில்யம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:16 வரை
அதன் பின் மகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 –10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00 — 1:30 மணி
எமகண்டம் : காலை 7:30 — 9:00 மணி
குளிகை : காலை 10:30 –12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள், நாகதேவதை வழிபாடு.

 

மேஷம் : கவன குறைவால் நன்மை பெறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரம் சீராக இயங்க குறைகளை சரி செய்வது நல்லது. பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

ரிஷபம் : செயல்களில் கூடுதல் நேர்த்தி உருவாகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.

மிதுனம் : பகைமை குணத்துடன் பேசுபவரிடம் விலகுவது நல்லது. நண்பரின் ஆலோசனை நன்மை தரும். தொழில் வளர்ச்சி கடின உழைப்பினால் சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். அறிமுகமில்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : உத்வேக மனமுடன் பணி புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

சிம்மம் : உங்களின் குடும்ப சிரமம் குறித்து பிறரிடம் பேச வேண்டாம். தொழிலில் இலக்கை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். பணச்செலவு அதிகரிக்கும். உணவு பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது.

கன்னி : உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவார்.புதிய திட்டங்களை சிறப்பாக வடிவமைப்பீர்கள்.தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : வெகுநாள் திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். இதனால் மனதில் புத்துணர்வும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவை பணம் வசூலாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம் : நண்பரின் அலட்சியமான பேச்சு வருத்தம் தரும். பொறுமை குணம் பின்பற்றி அவர் சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாக்குவீர்கள். தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். பண செலவில் சிக்கனம் சிரமம் தவிர்க்க உதவும்.

தனுசு : பணி தாமதம் ஆவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நண்பரின் உதவி ஊக்கம் தரும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை உண்டு. புதிய இனங்களில் பண செலவு ஏற்படலாம். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : முக்கியஸ்தர் ஒருவர் உங்களின் நற்குணங்களை பாராட்டுவார். தொழிலில் திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர்.

கும்பம் : உயர்வு, தாழ்வு கருதாமல் எவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம் : அவசியமற்ற வகையில் கிடைக்கின்ற உதவியை தவிர்ப்பது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். குடும்பத்திற்கான பண செலவு கூடும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: