Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 25/06/2019

இன்றைய நாள் எப்படி 25/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 10ம் தேதி, ஷவ்வால் 21ம் தேதி,
25.6.19 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 2:30 வரை;
அதன் பின் நவமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:23 வரை;
அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்த-சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00-4:30 மணி
எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
குளிகை : பகல் 12:00-1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : துர்கை,பைரவர் வழிபாடு.

 

மேஷம்: உடல்நலத்தில் கவனம் அவசியம். பணிகளை நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் சீர்பெற நண்பரால் உதவி உண்டு. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்: உங்களின் கருத்து நிறைந்த பேச்சு நன்மை தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சுறுசுறுப்பாக பணிபுரிவீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். வாகனப் பயணம் இனிதாக அமையும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம்: நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். போக்குவரத்தில் கவனம் தேவை. சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும்.

கடகம்: சங்கடமான சூழ்நிலை உருவாகலாம். உங்களின் நல்ல குணம் மாறாமல் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

சிம்மம்: எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். புதிய திட்டங்களை முன்யோசனையுடன் உருவாக்குவது அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். பிறர் பார்வையில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். தாயின் அன்பு, ஆசி மனதில் நம்பிக்கை தரும்.

கன்னி: உங்கள் நலன் விரும்புபவரை சந்திப்பீர்கள்; மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு கூடுதலாக பணிபுரிவீர்கள். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் காணப்படும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

விருச்சிகம்: சிலர் உங்களை குறை சொல்ல காத்திருப்பர். செயல்களில் சுறுசுறுப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். பணவரவு சுமாராக இருக்கும். இசைப்பாடலை ரசிப்பதால் மனதில் புத்துணர்வு பிறக்கும்.

தனுசு: உங்கள் பணிகளில் நிதானம் வேண்டும். சக தொழில், வியாபாரம் சார்ந்தவரிடம் சச்சரவு வேண்டாம். முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

மகரம்: தாமதமான பணிகளில் அனுகூலம் தேடி வரும். நற்குணம் உள்ளவர் நட்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் வளர்ச்சி பெறும். பணச்செலவில் தாராளம் காட்டுவீர்கள். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

கும்பம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற தாமதமாகும். அளவான பணவரவு கிடைக்கும். சேமிப்பு பணம் செலவாகும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம்.

மீனம்: புதியவர் ஒருவர் அன்பு பாராட்டுவார். பெருந்தன்மையுடன் அவர்களை மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/01/2020 RADIOTAMIZHA

இன்று! விகாரி வருடம், தை மாதம் 3ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 21ம் தேதி, 17.1.20 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சப்தமி ...

%d bloggers like this: