Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 25/06/2018

இன்றைய நாள் எப்படி 25/06/2018

இன்று!

விளம்பி வருடம், ஆனி மாதம் 11ம் தேதி, ஷவ்வால் 10ம் தேதி,
25.6.18 திங்கட்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி காலை 7:15 வரை;
அதன் பின் திரயோதசி திதி, விசாகம் நட்சத்திரம் காலை 7:34 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அசுவினி
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர், முருகன் வழிபாடு.

மேஷம்: குடும்ப விவகாரத்தி்ல் நல்ல தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். நெருங்கிய நண்பருக்கு உதவுவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: முன்யோசனையுடன் பிறரிடம் இருந்து உதவி பெறுவது நல்லது. கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வேண்டாம். பிள்ளைகளால் உதவி உண்டு.

மிதுனம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

கடகம்: பிறரின் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். முக்கிய செயல் நிறைவேறுவதில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

சிம்மம்: சிலரது பேச்சு மனதில் சங்கடம் உருவாக்கும். புதிய முயற்சிகளை பின்னொரு அனுகூல நாளில் துவங்கலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

கன்னி: பிறரது நல்ல கருத்தை ஏற்றுக் கொள்வீ்ர்கள். குடும்பத்தினர் ஆதரவுடன் செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். கடன் அடைபடும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்

துலாம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

விருச்சிகம்: புதியவர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். மனதில் உற்சாகம் நிலைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சீராகும். வெகுநாள் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

தனுசு: அனைவரிடமும் அன்புடன் பழகுவீர்கள். அடுத்தவரின் சூழ்நிலை அறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். சேமிப்புப் பணம் திடீர் செலவால் கரையும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்: பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கும்பம்: நண்பருக்கு உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாயம் அதிகரிக்கும். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

மீனம்: சிலரின் விமர்சனம் வருத்தம் தரலாம். தொழில், வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் ஏற்படலாம். மாணவர்கள் பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம். உறவினர்களின் ஆதரவு ஆறுதல் தரும்.

 

 

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 17/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 5ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 22ம் தேதி, 17.2.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, நவமி ...

%d bloggers like this: