Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 24/11/2019

இன்றைய நாள் எப்படி 24/11/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 8ம் தேதி, ரபியுல் அவ்வல் 26ம் தேதி,
24.11.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி இரவு 12:42 வரை;
அதன்பின் சதுர்த்தசி திதி, சித்திரை நட்சத்திரம் பகல் 12:37 வரை;
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : பிரதோஷம், மாத சிவராத்திரி, சிவன், சூரியன் வழிபாடு, முகூர்த்த நாள்,
வாஸ்து நாள் : பூஜை நேரம் காலை 11:29-12:05 மணி

மேஷம்: உங்கள் மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். உடன் பிறந்தவருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.
ரிஷபம்: வாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய வழி பிறக்கும். பிறர் வியக்கும் வகையில் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.
மிதுனம்: பணிகள் நிறைவேற கூடுதல் உழைப்பு அவசியமாகும். தொழிலில் உருவாகிற இடையூறை நண்பரின் உதவியால் சரி செய்வீர்கள். குறைந்த அளவில் பண வரவு கிடைக்கும். பொருட்கள் இரவல் கொடுக்க வாங்க, வேண்டாம். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
கடகம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.
சிம்மம்: உங்களின் இனிய பேச்சு நண்பரின் மன கஷ்டம் தீர உதவும். பெருமித எண்ணங்களுடன் பணி புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அபரிமிதமான வளர்ச்சி பெறும். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.
கன்னி: மனதில் ஒருமுக தன்மையுடன் பணி புரிவது அவசியம். சக தொழில் சார்ந்தவரிடம் தேவையற்ற விவாதம் பேச கூடாது. தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும்.

துலாம்: முக்கியமான பணியில் அக்கறை கொள்வீர்கள். உங்கள் நலம் விரும்புபவரின் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். தாராள அளவில் பண வரவு பெறுவீர்கள். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். முக்கிய செலவுக்காக பண கடன் பெறுவீர்கள். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
தனுசு: நண்பரிடம் ஆன்மிக கருத்துகளை பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.
மகரம் : இஷ்ட தெய்வ அனுக்கிரகம் புதிய நன்மைகளை பெற்று தரும். உங்களை அவமதித்து பேசியவர் தன் குறை உணர்ந்து அன்பு பாராட்டுவார். தொழிலில் உருவான தாமதம் விலகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.
கும்பம்: சிலர் சொல்லும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். குடும்ப தேவைக்கான பண செலவு அதிகரிக்கும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்க கூடாது.
மீனம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதில் நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் பணி சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 01/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 15ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி, 1.12.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி ...

%d bloggers like this: