Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 24/10/2019

இன்றைய நாள் எப்படி 24/10/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 7ம் தேதி, ஸபர் 24ம் தேதி,
24.10.19 வியாழக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி இரவு 7:03 வரை;
அதன்பின் துவாதசி திதி, மகம் நட்சத்திரம் காலை 10:39 வரை;
அதன்பின் பூரம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10 : 30 – 12 : 00 மணி
ராகு காலம் : பகல் 1 : 30 – 3 : 00 மணி
எமகண்டம் : காலை 6 : 00 – 7 : 30 மணி
குளிகை : காலை 9 : 00 – 10 : 30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
பொது : ஏகாதசி விரதம்,பெருமாள், தட்சிணாமூர்த்தி வழிபாடு, முகூர்த்த நாள்.

 

மேஷம் : உங்களை சிலர் குறை சொல்வர். தொழிலில் நிலுவை பணி படிப்படியாக நிறைவேறும். பணவரவு பெறுவதில் இதமான அணுகுமுறை வேண்டும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.

ரிஷபம் : உங்களுக்கு எதிரானவர் சிரமம் உருவாக்கலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

மிதுனம் : உங்கள் பேச்சு, செயலில் நிதானம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணவரவில் லாப விகிதம் கூடும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

கடகம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக முயற்சி உதவும். பண செலவில் சிக்கனம் வேண்டும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் சாந்தம் தரும்.

சிம்மம் : நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். புதிய கருத்துகளை பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். தாராள பணவரவை உரிய சேமிப்பாக மாற்றுவீர்கள். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.

கன்னி : உங்கள் செயல்களில் கவன குறைவினால் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். பணவரவில் சுமாரான லாபம் கிடைக்கும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

துலாம்: உறவினர் கூடுதல் அன்பு, பாசம் கொள்வர். மனதில் நம்பிக்கை உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை இலக்கை அடைவீர்கள். பணவரவு திருப்திகரமாகும். அரசியல்வாதிகள் புதிய பதவி பெற அனுகூலம் உண்டு.

விருச்சிகம்: சுறுசுறுப்பான செயலால் பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து உபரி பணவரவு கிடைக்கும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாக நடத்துவீர்கள்.

தனுசு: பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கியமான செலவுகளுக்கு பயன்படும். உடல் நலத்தில் தகுந்த கவனம் கொள்வது அவசியம்.

மகரம் : செயல்களில் கவன சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

கும்பம் : எந்த செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வளரும்.

மீனம் : உங்கள் இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். முக்கியமான விஷயத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: