Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 24/09/2019

இன்றைய நாள் எப்படி 24/09/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 7ம் தேதி, மொகரம் 24ம் தேதி,
24.9.19 செவ்வாய்க்கிழமை தேய்பிறை, தசமி திதி பகல் 12:05 வரை
அதன் பின் ஏகாதசி திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 6:53 வரை
அதன் பின் பூசம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:56 வரை, சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 7:30 — 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00- – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 — 10:30 மணி
குளிகை : பகல் 12:00 — 1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
பொது : துர்கை வழிபாடு.

 

மேஷம் : மனதில் ஒருமுக தன்மையுடன் பணி புரிவது அவசியம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டு பெறுவர்.

ரிஷபம் : வாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய வழி பிறக்கும். பிறர் வியக்கும் வகையில் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமான அளவில் இருக்கும். உபரி பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

மிதுனம் : வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். முக்கிய செலவுக்காக பண கடன் பெறுவீர்கள். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : முக்கியமான பணியில் அக்கறை கொள்வீர்கள். உங்கள் நலம் விரும்புவரின் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். தாராள அளவில் பணவரவு பெறுவீர்கள். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம் : உங்களிடம் உதவி பெற்றவர் உதாசீனமாக செயல்படுவார். குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

கன்னி : உங்கள் மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். நண்பருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் இருக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : இஷ்ட தெய்வ அனுகிரகம் புதிய நன்மைகளை பெற்று தரும். அவமதித்து பேசியவர் தன் குறை உணர்ந்து அன்பு பாராட்டுவார். தொழிலில் உருவான தாமதம் விலகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

விருச்சிகம் : அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவும்.

தனுசு : சிலர் சொல்லும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணச்செலவு அதிகரிக்கும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்க கூடாது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : மனதில் பெருமிதமும் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையும் ஏற்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

கும்பம் : உங்களின் இனிய பேச்சு நண்பரின் மன கஷ்டம் தீர உதவும். பெருமித எண்ணங்களுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அபரிமிதமான வளர்ச்சி பெறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.

மீனம் : பணிகள் நிறைவேற கூடுதல் உழைப்பு அவசியமாகும். தொழிலில் உருவாகிற இடையூறை நண்பரின் உதவியால் சரி செய்வீர்கள். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 29/04/2020

இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி, 29.4.2020 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி ...

%d bloggers like this: