Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 24/06/2019

இன்றைய நாள் எப்படி 24/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 20ம் தேதி,
24.6.19 திங்கட்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி இரவு 12:50 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 2:06 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண-சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
குளிகை : பகல் 1:30-3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரம்;
பொது : சிவன் வழிபாடு.

 

மேஷம்: உங்கள் சிந்தனையில் புதுமை நிறைந்திருக்கும். எவரிடமும் அளவுடன் பேசி நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம்: மனதில் இனம்புரியாத கவலை உருவாகலாம். நல்லவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவில் இருந்த தாமதம் விலகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். போக்குவரத்தில் கவனம் தேவை. சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும்.

கடகம்: மாறுபட்ட சூழ்நிலை நிலவும். நேர்மை குணத்தினால் அதிக நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் பணச்செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

சிம்மம்: உங்கள் பேச்சில் உறுதியான தன்மை நிறைந்திருக்கும். சிலரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி உண்டு. ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி: முக்கியமான செயலில் கவனம் கொள்வீர்கள். அனுகூல சூழ்நிலை அமைந்து நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். உற்பத்தி, விற்பனை செழிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

துலாம்: உங்களிடம் உதவி பெற்றவர் அலட்சியமாக பேசுவர். குடும்ப உறுப்பினர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி படிப்படியாக முன்னேறும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

விருச்சிகம்: உங்களின் கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்க வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். உணவுப் பொருள் தரமறிந்து உண்ணவும். எதிர்பார்த்த செய்தி வர தாமதம் ஆகும்.

தனுசு: திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் செயல்களின் பலன் நன்மை அளிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். நிலுவைப் பணம் வசூலாகும். அன்புக்குரியவர் பரிசுப்பொருள் தருவார்

மகரம்: வியத்தகு அளவில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சாதனை இலக்கு பூர்த்தியாகும். அதிக பணவரவில் குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கும்பம்: நண்பருக்கு இயன்ற அளவில் உதவி புரிந்து அன்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு சலுகை கிடைக்கும்.

மீனம்: எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தராதீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழல் தொந்தரவாக இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: