Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 24/04/2019

இன்றைய நாள் எப்படி 24/04/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 10ம் தேதி, ஷாபான் 17ம் தேதி,
24.4.19, புதன் கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி மதியம் 2:27 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 8:44 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
பொது : துர்கை வழிபாடு.
வாஸ்து நாள் பூஜை நேரம்: காலை 8:54 – 9:30 மணி.

மேஷம்: பணிகளில் மேம்போக்காக ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல்நலனுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்: குடும்பத்தினர் அதிக அன்பு பாசம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். வருமானம் சீராகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.

மிதுனம்: நண்பரின் உதவியால் நன்மை கிடைக்கும். உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் உறவினர் மத்தியில் அந்தஸ்துடன் திகழ்வர்.

கடகம்: எளிய பணி கூட சுமை போல தோன்றும். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். சுயகவுரவம் கருதி தாராளமாக செலவு செய்வீர்கள். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம்: மற்றவர் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க நண்பரின் ஆலோசனை உதவும். பணவரவில் இருந்த மந்த நிலை மாறும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்வது கூடாது.

கன்னி: வழக்கத்திற்கு மாறாக பணிச்சுமை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். பணவரவு பெறுவதில் தாமதம் ஏற்படும். சேமிப்பு திடீர் செலவால் கரையும். செல்லப்பிராணிகளிடம் விலகுவது நல்லது. நண்பரால் உதவி உண்டு.

துலாம்: முக்கிய பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: பிடிவாத குணத்தால் பிரச்னை ஏற்படலாம். தொழில், வியாபாரம் சீராக கூடுதல் உழைப்பு அவசியம். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுப்பது நல்லது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு: கூடுதல் பொறுப்பு மனதை சஞ்சலப்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நவீன மாற்றங்களை செய்வது அவசியம்.பணச்செலவு அதிகரிக்கலாம்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.

மகரம்: எவரிடமும் வாக்குவாதம் பேசக் கூடாது. பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு ஆளாகலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

கும்பம்: மனதில் சந்தோஷம் நிலைக்கும். குடும்ப பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். உறவினரால் உதவி கிடைக்கும்.

மீனம்: வசீகர பேச்சால் பிறரைக் கவர்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...