Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 23/11/2019

இன்றைய நாள் எப்படி 23/11/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 7ம் தேதி, ரபியுல் அவ்வல் 25ம் தேதி,
23.11.19 சனிக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி இரவு 2:43 வரை;
அதன்பின் திரயோதசி திதி, அஸ்தம் நட்சத்திரம் பகல் 2:04 வரை,
அதன்பின் சித்திரை நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30 – 3:00 மணி
குளிகை : காலை 6:00 – 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : சனீஸ்வரர் வழிபாடு. சாய்பாபா பிறந்த நாள்.

மேஷம்: மன சாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். உபரி பண வரவு கிடைக்கும். நண்பர் முன்பு கேட்ட உதவியை வழங்குவீர்கள்.
ரிஷபம் : சமூக நிகழ்வுகள் வருத்தம் தரலாம். எவரிடமும் வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பால் மட்டுமே பண வரவு சீராகும். விஷ பிராணிகளிடம் விலகுவது நல்லது. உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை நல்ல பலன் தரும்.

மிதுனம் : சிலரது தற்பெருமை பேச்சு மனதில் சங்கடம் உருவாக்கும். காலத்தின் அருமை உணர்ந்து பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நிலுவை பணம் ஓரளவு வரவாகும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கடகம்: உங்களை நண்பர்கள் வாழ்த்துவர். தொழில், வியாபாரம் செழித்து வளரும். லாப விகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சு வார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும்.
சிம்மம்: சில நிகழ்வு மனதில் பாதிப்பு ஏற்படுத்தலாம். தெய்வ நம்பிக்கையுடன் பணி புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.
கன்னி : உங்கள் மனதில் இருந்த தயக்கம் விலகும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.
துலாம்: எதிரியிடம் விலகுவதால் சுய கவுரவம் பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் பணி சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கான பண வரவு கிடைக்கும். புத்திரரை வழி நடத்துவதில் இதமான அணுகுமுறை நல்லது.
விருச்சிகம்: மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும். அற பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். திருப்திகரமான அளவில் பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும்.
தனுசு: எளிய அணுகு முறையால் நல்லவர் மனதில் இடம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை இலக்கு நிறைவேறும். தாராள பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.
மகரம்: உங்களின் யதார்த்த பேச்சு பிறர் மனதை சங்கட படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். சொத்தின் பேரில் அதிக பண கடன் பெற வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.
கும்பம் : குடும்ப உறுப்பினர்களிடம் விவாதம் பேச வேண்டாம். பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். பண செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
மீனம் : இஷ்ட தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். ஆதாய பண வரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 14/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 1ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி, 14.5.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி ...

%d bloggers like this: