Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 23/10/2019

இன்றைய நாள் எப்படி 23/10/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 6ம் தேதி, ஸபர் 23ம் தேதி,
23.10.19 புதன்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 9:24 வரை,
அதன் பின் ஏகாதசி திதி, ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12:13 வரை;
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9 : 00- 10 : 30 மணி
ராகு காலம் : பகல் 12 : 00 – 1 : 30 மணி
எமகண்டம் : காலை 7 : 30 – 9 : 00 மணி
குளிகை : காலை 10 : 30 – 12 : 00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : நாகதேவதை வழிபாடு. கரிநாள்.

 

மேஷம் : நிகழ்வுகள் மாறுபட்டதாக அமையலாம். செயலில் முன்யோசனை பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவு மிதமான அளவில் இருக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம் : உறுதியான மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர்.

மிதுனம் : புதிய சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறு தொந்தரவு ஏற்படலாம். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். சமரச பேச்சுகளில் நிதானம் வேண்டும்.

கடகம்: மனதில் புத்துணர்வு பிறக்கும். அறிவு பூர்வமான செயல்களில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம் : பணிகள் நிறைவேற கூடுதல் முயற்சி வேண்டும். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடுகள் மாற்று உபாயத்தால் சரியாகும். அதிக நிபந்தனைகளுடன் பணக்கடன் பெற வேண்டாம். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

கன்னி : பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் நண்பரின் உதவியால் வளர்ச்சி பெறும். பண பரிவர்த்தனை அதிகரிக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பணி இலகுவாக நிறைவேறும். நிலுவை பணம் வசூலாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

விருச்சிகம்: அனுபவசாலியின் ஆலோசனையால் பணி சிறப்பாக அமையும். தொழிலில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். பொருட்கள் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

தனுசு: குடும்ப உறுப்பினர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழிலில் இடையூறுகளை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். பணவரவு முக்கிய தேவைகளுக்கு பயன்படும். இசை பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.

மகரம் : நண்பரின் அறிமுகமும் ஆலோசனையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து அதிக நன்மை பெறுவீர்கள். தாராள பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

கும்பம் : நற்குணம் உள்ளவரின் நட்பு கிடைக்கும். தாமதமான செயல் அனுகூல பலன் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை தெய்வ அருளால் அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

மீனம் : உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்துவது அவசியம். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். உடல் ஆரோக்கியம் உணர்ந்து விருந்தில் பங்கேற்கலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: