Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 23/10/2018

இன்றைய நாள் எப்படி 23/10/2018

இன்று!

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 6ம் தேதி, ஸபர் 13ம் தேதி,
23.10.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 10:26 வரை;
அதன் பின் பவுர்ணமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 9:33 வரை;
அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : முருகன், துர்க்கை வழிபாடு, இரவு 10:27 மணி முதல் கிரிவலம் வருதல், கரிநாள்.

மேஷம்: எதிர்ப்பாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் சராசரி இலக்கை அடைய விடாமுயற்சி தேவைப்படும். பணியாளர்கள் நிறுவனத்தின் சட்டதிட்டங்களை மதிக்கவும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பெண்கள் ஒவ்வாத உணவைத் தவிர்க்கவும்.

ரிஷபம்: நற்செயல் மூலம் பலரின் அன்பைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மிதுனம்: சிறு செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி கண்டு மனநிறைவு காண்பீர்கள். ஆதாய உயர்வால் சேமிப்பு கூடும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் நகை, புத்தாடை வாங்க அனுகூலம் ஏற்படும்.

கடகம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில் வியாபாரம் தாமத கதியில் இயங்கும். கடன் பெற நேரிடலாம். பணியாளர்களுக்கு கடினமான பணிகளில் பாதுகாப்பு அவசியம். பெண்கள் நகை, பணம் கவனமுடன் பாதுகாக்கவும்.

சிம்மம்: உணர்ச்சி வசப்படும் சூழலைத் தவிர்ப்பது நல்லது. கடின உழைப்பால் தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு மூலம் அவசிய செலவை நிறைவேற்றுவீர்கள். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் ஒப்படைக்க கூடாது.

கன்னி: அன்பு மனதால் மற்றவரை அரணைப்பீர்கள். சமயோசித செயலால் தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.ஆதாயம் உயரும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் விரும்பி பொருளை வாங்கி மகிழ்வர்.

துலாம்: குடும்பத்தினர் அதிக பாசம் கொள்வர். தடைகளை தகர்த்து முன்னேறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். வருமானம் பெருகும். பணியாளர்கள் சகஊழியர்கள் மத்தியில் பாராட்டு காண்பர். ஆரோக்கியம் பலம் பெறும்.

விருச்சிகம்: உங்களின் நற்செயலை சிலர் குறை சொல்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: திறமையை வெளிப்படுத்துவது நல்லது. தொழிலில் இடையூறுகளை உடனுக்குடன் சரிசெய்யவும். அளவான பணவரவு கிடைக்கும்.இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

மகரம்: பணிகளில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்களுக்கு சமூக அந்தஸ்து உயரும்.

கும்பம்: வீண்பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணவரவுக்கேற்ப செலவும் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

மீனம்: மனதில் புத்துணர்வு மேலோங்கும். தொழில் வளம் சிறந்து வாழ்க்கைத்தரம் உயரும். உபரி வருமானம் கிடைக்கும்.பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். அரசியல்வாதிகள் விரும்பிய பதவி பெற அனுகூலம் ஏற்படும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: