Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 23/09/2019

இன்றைய நாள் எப்படி 23/09/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 6ம் தேதி, மொகரம் 23ம் தேதி,
23.9.19 திங்கட்கிழமை தேய்பிறை, நவமி திதி பகல் 1:54 வரை
அதன் பின் தசமி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 7:53 வரை
அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்

நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 — 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 –12:00 மணி
குளிகை : பகல் 1:30 — 3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூராடம்
பொது : சிவன் வழிபாடு.

 

 

மேஷம் : உங்களின் நற்செயலை நண்பர்கள் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். லாப விகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு, மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

ரிஷபம் : குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விஷயம் பேச வேண்டாம். பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

மிதுனம் : எளிய அணுகுமுறையால் நல்லவர் மனதில் இடம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும்.

கடகம் : அதிகம் பேசுவதை தவிர்ப்பதால் சுய கவுரவம் பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கான பண வரவு கிடைக்கும். புத்திரரை வழி நடத்துவதில் இதமான அணுகுமுறை நல்லது.

சிம்மம் : இஷ்ட தெய்வ நம்பிக்கையுடன் பணி புரிவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கன்னி : உங்கள் மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற உதவி புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும்.

துலாம் : நண்பரிடம் வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக உழைப்பால் மட்டுமே பணவரவு சீராகும். செல்ல பிராணிகளிடம் விலகுவது நல்லது.

விருச்சிகம் : சில நிகழ்வு மனதில் பாதிப்பு ஏற்படுத்தலாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணி சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் அவசியம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

தனுசு : மன சாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். நண்பர் முன்பு கேட்ட உதவியை வழங்குவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : உங்கள் மனதில் இருந்த தயக்கம் விலகும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

கும்பம் : உங்களின் யதார்த்த பேச்சு பிறர் மனதை சங்கடப்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். சொத்தின் பேரில் பணக்கடன் பெறுபவர் நம்பகமானவரிடம் வாங்குவது நல்லது.

மீனம் : சிலரது பேச்சு மனதில் சங்கடம் உருவாக்கும். காலத்தின் அருமையை உணர்ந்து பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நிலுவை பணம் கூடுதல் முயற்சியால் வரவாகும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: