Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 23/08/2018

இன்றைய நாள் எப்படி 23/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 7ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி,
23.8.18 வியாழக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி மதியம் 12:06 வரை;
அதன் பின் திரயோதசி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 6:23 வரை;
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொது : முகூர்த்தநாள், பிரதோஷம், சிவன், நந்தீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: புதிய நண்பரின் அறிமுகமும், ஆலோசனையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து கூடுதல் நன்மை பெறுவீர்கள். தாராள பணவரவால் சேமிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

ரிஷபம்: அனுபவசாலியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழிலில் சீரான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை. யாரிடமும் பணம், நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

மிதுனம்: உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்தில் பங்கேற்பர். உடல்நலனில் கவனம் தேவை.

கடகம்: விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பணி இலகுவாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்: பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் நண்பரின் உதவியால் வளர்ச்சி பெறும். வருமானம் உயரும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கன்னி: புத்துணர்வுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் குறுக்கிட்டு மறையும். பணவிஷயத்தில் சற்று கவனம் தேவை. பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சில் நிதானம் தேவை.

துலாம்: செயலில் முன்யோசனையுடன் ஈடுபடவும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

விருச்சிகம்: எதிலும் அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு: பிறரது ஏளன பேச்சுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்பத்தினர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழிலில் இடையூறு குறுக்கிட்டாலும் வருமானம் குறையாது. இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நன்மை அளிக்கும்.

மகரம்: நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தாமதமான செயலில் அனுகூலபலன் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை தெய்வ அருளால் அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

கும்பம்: பணிகள் நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு இருக்கலாம். லாபம் சீராக இருக்கும். அதிக நிபந்தனைகளுடன் கடன் பெற வேண்டாம். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும்.

மீனம்: உறுதி மிக்க மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வெகுநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: