Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 23/06/2019

இன்றைய நாள் எப்படி 23/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 8ம் தேதி, ஷவ்வால் 19ம் தேதி,
23.6.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி இரவு 10:58 வரை;
அதன் பின் சப்தமி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 11:37 மணி வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00-1:30 மணி
குளிகை : பகல் 3:00-4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
பொது : சூரியன் வழிபாடு. முகூர்த்தநாள்.

 

மேஷம்: நண்பரிடம் உதவி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

ரிஷபம்: உங்களின் இனிய வார்த்தைகள் முக்கியஸ்தரின் அன்பை பெற்றுத்தரும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

மிதுனம்: வழக்கத்திற்கு மாறாக பணி தொந்தரவு தரலாம். மனதை அமைதிப்படுத்துவது அவசியம். தொழில், வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றவும்.

கடகம்: மற்றவரின் அதிருப்தி வராதபடி செயல்படவும். தொழிலில் வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்புப் பணம் செலவுக்கு பயன்படும். பிள்ளைகளின் திறமைமிகு செயல் மனதை மகிழ்விக்கும்.

சிம்மம்: மனதில் தெய்வீக சிந்தனை வளரும். உறவினர்களுக்கு உதவி புரிவீர்கள். தொழில், வியாபாரம் சிறந்து வாழ்க்கைத் தரம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

கன்னி: உங்கள் எண்ணமும், செயலும் உற்சாகம் பெறும். எளிமையவருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும்; பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பாராட்டு, வெகுமதி பெறுவர்.

துலாம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் பாதுகாப்பு வேண்டும் .தொழிலில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். கொஞசம் பணக்கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.

விருச்சிகம்: எதிர்கால நலன்களை கவனத்தில் கொள்ளவும். தொழிலில் கூடுதல் உழைப்பால் உற்பத்தி, விற்பனை சீராகும். ஊட்டம் நிறைந்த உணவு உண்பதால் உடல்நலம் சீராகும். அதிகவிலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.

தனுசு : புதியவர்களின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். விருந்து. விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம்: சிலர் சுயலாபத்திற்காக உங்களுக்கு உதவிட முன்வருவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு உண்டு. பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

கும்பம்: புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்; இனிமையான அனுபவங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற சில மாற்றம் செய்வீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

மீனம்: முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். தவிர்க்க இயலாத வகையில் பணச்செலவு ஏற்படும். சுற்றுக்சூழ்நிலை தொந்தரவால் நித்திரை தாமதமாகும். மாணவர்கள் படிப்பில் அதிக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/07/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி, 16.7.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: