Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 22/10/2018

இன்றைய நாள் எப்படி 22/10/2018

இன்று!

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 5ம் தேதி, ஸபர் 12ம் தேதி,
22.10.18 திங்கட்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி இரவு 10:22 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 8:07 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண–சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரம்
பொது : பிரதோஷம், சிவன், நந்தீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

ரிஷபம்: முயற்சிக்குரிய பலன் முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். ஆதாய அதிகரிப்பால் சேமிப்பு உயரும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டு.

மிதுனம்: சாந்த குணத்துடன் பேசி நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதியவர்களின் உதவி வந்து சேரும். பணவரவில் திருப்திகரமான நிலை உண்டு. பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்களுக்கு புத்திரரின் நற்செயல் பெருமை தரும்.

கடகம்: பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுக்கு தேவையான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும்.

சிம்மம்: நண்பர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். சிறு அளவில் கடன் பெறுவீர்கள். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றவும்.

கன்னி: நண்பரின் பேச்சு உற்சாகத்தை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். உபரி வருமானம் சேமிப்பாக மாறும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவர்.

துலாம்: சிந்தனையில் புதிய மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி மேற்கொள்வீர்கள் . எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகம்: மனதில் தெளிவு பிறக்கும். சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான பணவரவு இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்கள் வழிபாட்டில் ஈடுபடுவர்.

தனுசு: பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது .பிறருக்காக பொறுப்பு ஏற்க வேண்டாம். தொழிலில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடல் நலத்திற்கு சிகிச்சை பெறுவீர்கள். பெண்கள் குடும்ப வளர்ச்சிக்காகப் பாடுபடுவர்.

மகரம்: மனதில் நிம்மதி நிலைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். லாபம் திருப்திகரமான அளவில் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் ஆதரவால் முன்னேறுவர். பெண்கள் குடும்பவளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.

கும்பம்: உறவினர்களின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணி அதிகரிக்கும். தொழி்ல்ரீதியாக கடன் பெறுவீர்கள். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

மீனம்: மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் ஆடைகள் வாங்குவர்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 15/12/2018

இன்று! விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் 7ம் தேதி, 15.12.18, சனிக்கிழமை, வளர்பிறை அஷ்டமி ...

%d bloggers like this: