Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 22/08/2018

இன்றைய நாள் எப்படி 22/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 6ம் தேதி, துல்ஹஜ் 10ம் தேதி,
22.8.18 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி காலை 10:14 வரை;
அதன் பின் துவாதசி திதி, பூராடம் நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்த யோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு, வாஸ்து நாள், பூஜை நேரம் காலை 7:23-7:59 மணி.

மேஷம்: செயலில் குளறுபடி வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். முக்கியச் செலவுக்காக கடன் பெறுவீர்கள். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.

ரிஷபம்: நற்செயலில் ஈடுபட்டு பெருமிதம் கொள்வீர்கள். பணியாளர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படலாம்.தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். பணவரவு சீராக இருக்கும். சிலருக்கு உடல் சிகிச்சை தேவைப்படலாம்.

மிதுனம்: நண்பர் உங்களிடம் அன்பு பாராட்டுவார் .தொழில் வியாபாரம் செழித்து தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். அரசு சார்ந்த உதவி பெற அனுகூலம் உண்டு. பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர்.

கடகம்: அனுபவ அறிவு வளர்ச்சிக்கு கைகொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க வாய்ப்பு வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவை அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். பெண்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

சிம்மம்: ஞாபக மறதியால் பணி தாமதம் ஆகலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. எதிர்பார்த்த பணவரவு ஓரளவு கிடைக்கும். நண்பரின் அந்தரங்க விஷயத்தில் தலையிட வேண்டாம்.சீரான ஓய்வு உடல்நலனை பாதுகாக்கும்.

கன்னி: பேச்சு செயலில் நிதானம் பின்பற்றவும். குடும்பத்தினர் ஆதரவு மனப்பாங்குடன் செயல்படுவர். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் விடாமுயற்சி தேவைப்படும். பணவரவில் இருந்த தாமதம் விலகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

துலாம்: சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். நிலுவைப் பணம் வரவாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுற்றுலா சென்றுவர திட்டம் உண்டாகும். நல்லவர்களின் வாழ்த்தினை பெறுவீர்கள்.

விருச்சிகம்: அறியாதவர்களிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும். பெண்கள் தாய் வீட்டாருக்கு உதவி செய்வர்.

தனுசு: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். புதியவர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

மகரம்: குடும்ப சிரமத்தால் மனம் பாதிக்கலாம். பழைய அனுபவம் தந்த படிப்பினை மறக்காமல் செயல்படவும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

கும்பம்: நேர்த்தியுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

மீனம்: எளிதான பணி கூட சுமை போல தோன்றும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமார். மனைவியின் ஆலோசனை நம்பிக்கை அளிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/04/2019

இன்று! விகாரி வருடம், சித்திரை மாதம் 3ம் தேதி, ஷாபான் 10ம் தேதி, 16.4.19, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...

%d bloggers like this: