Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி,
22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி இரவு 9:02 வரை;
அதன் பின் சஷ்டி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 9:04 மணி வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30-3:00 மணி
குளிகை : காலை 6:00-7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: நண்பருக்கு உதவிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் அனுகூலம் உருவாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

ரிஷபம்: உறவினரின் அன்பு மழையில் நனைவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு இனிதாக நிறைவேறும்.

மிதுனம்: சுற்றுப்புறச்சூழ்நிலை மாறுபட்டதாக அமையும். கவனத்துடன் பணியாற்றுவது அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி சுமாரான அளவில் இருக்கும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். .விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

கடகம்: சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழல் தொந்தரவு தரலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம்: மனதில் இருந்த கவலை நீங்கும். தொழில், வியாபார வளர்ச்சி பெற கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி: சுயகவுரவம் பாதிக்கும் விதமாக சிலர் பேசுவர்; அலட்சியப்படுத்துங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டியை சரி செய்வீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். சத்து நிறைந்த உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம்பெறும்.

துலாம்: சிலரது விமர்சனம் மனம் தளரச்செய்யலாம். சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் நினைத்த இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்: எடுத்த காரியம் நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை தரும். தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனஅமைதியை தரும்.

தனுசு: நீங்கள் செய்த உதவிக்கான நன்மை தேடிவரும். நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள்; தொழில், வியாபாரம் வளர்ச்சியின் அனுகூல காரணி பலம் பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

மகரம்: மனதில் இனம் புரியாத சஞ்சலம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழியில் செயல்பட ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.

கும்பம்: உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். விலகிய சொந்தம் உறவினர் பாராட்டுவர்.

மீனம்: தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற சாதக சூழ்நிலைகளை அறிந்து கொள்வது அவசியம். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/07/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி, 16.7.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: