Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 22/04/2019

இன்றைய நாள் எப்படி 22/04/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 8ம் தேதி, ஷாபான் 15ம் தேதி,
22.4.19, திங்கற்க்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி மதியம் 3:02 வரை;
அதன் பின் திரிதியை திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 7:34 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
பொது : சூரியன் வழிபாடு.

மேஷம்: நண்பர், உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிப்படையும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவையை தாராளமாக பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

ரிஷபம்: உங்கள் பேச்சில் விரக்தியின் தன்மை வெளிப்படலாம். கவுரவத்தை பாதுகாப்பது அவசியமாகும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும்.நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

மிதுனம்: பெரியவர்களின் வழிகாட்டுதல் வெற்றிக்கு துணை நிற்கும்.தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். புத்திரரின் நற்செயல் பெருமையை தேடித் தரும்.

கடகம்: பொது விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும், சுமாரான பணவரவு கிடைக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். தெய்வ வழிபாட்டால் நன்மை உண்டாகும்.

சிம்மம்: உங்களின் கருத்து நிறைந்த பேச்சை பலரும் பாராட்டுவர்.தொழில், வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை சரியாகும்.உபரி வருமானம் கிடைக்கும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்களால் வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.

கன்னி: வெகுநாள் எதிர்பார்ப்பு இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து வளர வாய்ப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர்.

துலாம்: குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்காக கூடுதலாக பணிபுரிவீர்கள். தாராள வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்கள் வாங்கித் தருவீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும்.

விருச்சிகம்: நண்பர்களால் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் வளர்ச்சி உருவாகும்.ஆதாய உயர்வால் சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

தனுசு: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை பிறக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி திட்டமிட்டபடி நிறைவேறும். கூடுதல் பணவரவில் தானதர்மம் செய்வீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். புத்திரர் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

மகரம்: உறவினர் மத்தியில் நற்பெயர் உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் உயர்ந்த இலக்கை அடைவீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விலகுவர். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும்.

கும்பம்: வசீகரமாக பேசி நன்மை காண்பீ்ர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் பெருமிதம் காண்பீர்கள். உபரி வருமானத்தால் சேமிப்பு கூடும். தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கப் பெறுவீ்ரகள். புதிய சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும்.

மீனம்: இஷ்ட தெய்வ அருளால் நன்மை காண்பீ்ரகள். தொழில், வியாபாரத்தில் நேரம் தவறாமையை பின்பற்றவும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 14/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 1ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி, 14.5.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி ...

%d bloggers like this: