Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 21/10/2019

இன்றைய நாள் எப்படி 21/10/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 4ம் தேதி, ஸபர் 21ம் தேதி,
21.10.19 திங்கட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 1:35 வரை;
அதன்பின் நவமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் பகல் 2:46 வரை;
அதன்பின் பூசம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6 : 00 – 7 : 30 மணி
ராகு காலம் : காலை 7 : 30 – 9 : 00 மணி
எமகண்டம் : காலை 10 : 30 – 12 : 00 மணி
குளிகை : பகல் 1 : 30 – 3 : 00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்;
பொது : பைரவர் வழிபாடு.

 

மேஷம் : எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலங் களை கவனமுடன் பாதுகாக்கவும். திட்டமிட்டதில் அதிக பணச்செலவு ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.

ரிஷபம் : உயர்ந்த செயல்களால் நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும். தொழில், வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணிபுரிவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மிதுனம் : பணிகளில் மாற்றம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அக்கறையுடன் செயல்பட வேண்டும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை மனதில் நம்பிக்கை தரும்.

கடகம்: உங்கள் செயல் திறமையை முழு அளவில் பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். எதிர்ப்பு, வந்த சுவடு தெரியாமல் விலகும்.

சிம்மம் : முக்கிய செயலை ஆர்வமுடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நண்பரால் சில அனுகூலம் உண்டு. மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.

கன்னி : பணிகளில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். உபரி பணவரவில் சேமிப்பு கூடும். மனைவி அன்பு, பாசத்துடன் குடும்ப நலன் பேணுவார். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: மிகுந்த மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். சிறிய முயற்சியும் அதிக நன்மையை தரும். தொழிலில் அபிவிருத்தி செய்ய தகுந்த பணவசதி கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: சிலரது அவசியமற்ற பேச்சு சங்கடம் உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண கூடாது.

தனுசு: பொறுமையுடன் செயல்படுவது அவசியம். தொழில் சார்ந்த குறையை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு அரசு அனுகூலம் கிடைக்க தாமதம் ஆகலாம்.

மகரம் : பணிகளை நேர்த்தியுடன் நிறைவேற்றுவீர்கள். மனதில் நிம்மதியும், பெருமிதமும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். தாராள பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

கும்பம் : பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் ஆதரவில் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

மீனம் : வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. குடும்ப உறுப்பினர் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல் ஏற்படும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: