Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 21/08/2018

இன்றைய நாள் எப்படி 21/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 5ம் தேதி, துல்ஹஜ் 9ம் தேதி,
21.8.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 8:38 வரை;
அதன் பின் ஏகாதசி திதி, மூலம் நட்சத்திரம் இரவு 3:54 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : முருகன், துர்க்கை வழிபாடு.

மேஷம்: முக்கிய செயலை பொறுப்புடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். பணவிஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இதமான அணுகுமுறை அவசியம். நண்பரிடம் எதிர்பார்த்த நன்மை நடந்தேறும்.

ரிஷபம்: பிறரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழிலில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். லாபம் சீராக இருக்கும். பணியாளர் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு திடீர் செலவு ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.

மிதுனம்: பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பொன், பொருள் சேர யோகமுண்டு.

கடகம்: பேச்சில் திறமை வெளிப்படும். தொழில், வியாபாரம் செழிக்கும். விற்பனை அதிகரிப்பால் லாபம் பெருகும். எதிரியால் இருந்த தொல்லை சுவடு தெரியாமல் விலகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

சிம்மம்: எதிலும் நிதானம் பின்பற்றவும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற அக்கறையுடன் செயல்படுவது நல்லது. லாபம் சுமார். திடீர் செலவால் சேமிப்பு கரையும். மனைவியின் ஆறுதல் வார்த்தை மனதில் நம்பிக்கையளிக்கும்.

கன்னி: பொறுமையுடன் செயல்படுவது அவசியம். தொழில் சார்ந்த குறையை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகலாம்.

துலாம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: பணிகளில் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர அனுபவசாலியின் ஆலோசனை உதவும். சேமித்த பணம் திடீர் செலவால் கரையும். மனைவி கூடுதல் பாசத்துடன் நடந்து கொள்வார். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு: வீண் பேச்சு பேசுபவரிடம் விலகியிருக்கவும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி படிப்படியாக முன்னேறும். சீரான வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் திடீர் மாறுதல் ஏற்படும்.

மகரம்: சிலரது அவசியமற்ற பேச்சு சங்கடம் உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணியால் மலைப்பு உண்டாகும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி வரும்.

கும்பம்: மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சிறிய முயற்சியும் அதிக அளவில் நன்மை தரும். தொழிலில் அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். இயன்ற வகையில் தான தர்மம் செய்வீர்கள்.

மீனம்: திட்டமிட்ட செயல்களை நேர்த்தியுடன் நிறைவேற்றுவீர்கள். மனதில் நிம்மதியும், பெருமிதமும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/04/2019

இன்று! விகாரி வருடம், சித்திரை மாதம் 3ம் தேதி, ஷாபான் 10ம் தேதி, 16.4.19, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...

%d bloggers like this: