Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 21/05/2019

இன்றைய நாள் எப்படி 21/05/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 7ம் தேதி, ரம்ஜான் 15ம் தேதி,
21.5.19 செவ்வாய்க்கிழமை தேய்பிறை, திரிதியை திதி, இரவு 3:19 வரை;
அதன்பின் சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:01 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00 – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : பகல் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : துர்க்கை வழிபாடு, கரிநாள்.

 

மேஷம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் கனிவான ஆலோனை நல்ல மாற்றம் உருவாக உதவும். தொழில் மேம்பாட்டிற்காக அதிக நேரம் பணிபுரிவீர்கள். உறவினர் வகையில் பணம் செலவு செய்ய நேரிடலாம்.

ரிஷபம்: தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் உங்கள் உதவியை எதிர்பார்த்திடுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

மிதுனம்: உறவினர் புதிய சொந்தங்களை அறிமுகப்படுத்துவர். தொழிலில் வளர்ச்சிக்காக செய்து வரும் பணி திருப்திகரமாக நிறைவேறும். நிலுவைப்பணம் எளிதில் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற வாய்ப்பு வரும்.

கடகம் : மனதில் இனம் புரியாத வருத்தம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில், வியாபார வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம்.

சிம்மம் : பகைமை குணம் உள்ள ஒருவர் பரிகாசத்துடன் பேசுவார். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். போக்குவரத்தில் கவன நடை பின்பற்றவும்.

கன்னி : நியாயப்படி நடப்பதால் நன்மை உருவாகும். தொழில், வியாபாரத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும். பிறர் பார்வையில் தெரியும்படி பணத்தை தாரளமாக செலவு செய்வதை தவிர்க்கவும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

துலாம் : குடும்ப பெரியவர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவதால் அனுகூல சூழ்நிலை உருவாகும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள்.

விருச்சிகம் : சுற்றுப்புற சூழல் தொந்தரவு தருவதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத் தன்மையை பாதுகாப்பது நல்லது. குறைந்த அளவில் பண வரவு உண்டு. பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

தனுசு : நண்பரின் கவனக்குறைவான செயலை சரி செய்வீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெற, கூடுதலாக பணி புரிவீர்கள். நிலுவைப் பணமும் வசூலாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் : உங்கள் சிரமம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். அதிக உழைப்பால் தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது. வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்ய நேரிடலாம்.

கும்பம் : முக்கியப்பணி நிறைவேற உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மீனம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். வேலைத் திறமையை வளர்த்து கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி பணவருமானம் கிடைக்கும். உறவினர்களிடமிருந்து சுபசெய்தி வந்து சேரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: