Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 21/04/2019

இன்றைய நாள் எப்படி 21/04/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 7ம் தேதி, ஷாபான் 14ம் தேதி,
21.4.19, ஞாயிற்று கிழமை, தேய்பிறை, பிரதமை திதி மாலை 4:02 வரை;
அதன்பின் துவிதியை திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 7:37 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த-சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். தொழில் வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். கூடுதல் பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.

ரிஷபம்: பொதுநலனில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தினர்களின் ஆதவு கிடைக்கும். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வெகுநாள் தேடிய பொருள் கிடைக்கும்.

மிதுனம்: அடுத்தவர் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம்.தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும்.பணவரவை விட நிர்வாகச் செலவு கூடும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம்: குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழிலில் பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது.

சிம்மம்: உறவினர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பணி இனிதாக நிறைவேறும். கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

கன்னி: வீண் பேச்சு பேசுவோரிடம் விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

துலாம்: உலக நடப்பை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு வியத்தகு அளவில் பலம் பெறும்.தாராள பணவரவால் சேமிப்பீர்கள். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்கள் சிக்கனமாக செலவு செய்வர். இஷ்ட தெய்வ வழிபாட்டால் புத்துணர்வு பெறுவீர்கள். பிள்ளைகளால் உதவி உண்டு.

தனுசு: மனதில் உற்சாகம் மேலோங்கும். நண்பர்கள் கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாத்தில் லாபம் அதிகரிக்கும்.வழக்கு விவகாரத்தில் அனுகூலமான முடிவு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவர்.

மகரம்: கடந்தகால நல்ல அனுபவங்களை எண்ணி மகிழ்வீர்கள்..புதிய உத்தியால் தொழில், வியாபாரம் செழிக்கும். உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டை பெறுவர். கூடுதல் சொத்து சேர்க்கை பெற அனுகூலம் உண்டு.

கும்பம்: உறவினர்களிடம் பேச நினைத்த விஷயம் மாறிப் போகலாம்.தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறு சரிசெய்வதில் தாமதம் இருக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.

மீனம்: பேச்சு, செயல்களில் நிதானம் தேவை.. தொழில், வியாபார வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்ட முயல்வர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: