Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 20/11/2018

இன்றைய நாள் எப்படி 20/11/2018

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 4ம் தேதி, ரபியுல் அவ்வல் 11ம் தேதி
20.11.18 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, துவாதசி திதி மதியம் 1:30 வரை;
அதன்பின் திரயோதசி திதி, ரேவதி நட்சத்திரம் மாலை 6:11 வரை;
அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : பிரதோஷ விரதம், நந்தீஸ்வரர், துர்க்கை வழிபாடு.

மேஷம் : திட்டமிட்ட பணிகளை நிறைவேற்ற கூடுதல் முயற்சி தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாகும். அரசு சார்ந்த உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். சீரான ஓய்வு மனதிற்கு புத்துணர்வு தரும்.

ரிஷபம் : சிறு செயல் கூட பல மடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் கவனத்துடன் பணிபுரிவீர்கள். இலக்கு நிறைவேறி உபரி பணவரவை பெற்றுத் தரும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம் : செயல்களில் அன்பின் குணம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் பின்பற்றுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும்.

கடகம்: சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வார். சொந்த உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

சிம்மம் : சொந்த பிரச்னையை பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் இருந்த தாமதம் சரியாகும். நிர்ப்பந்தத்தின் பேரில் அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராக இருக்கும்.

கன்னி : திட்டமிட்ட செயல் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மனமுவந்து பாராட்டுவர். தொழில் வியாபார நடைமுறையில் இருந்த சிரமம் விலகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும்.

துலாம்: சமயோசிதமாக செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.

விருச்சிகம்: சுய தேவை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். இதனால் சிலரது அதிருப்திக்கு உட்பட நேரிடலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.

தனுசு: புதியவர்களை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திக்காக கூடுதல் மூலதனம் தேவைப்படும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.

மகரம் : நல்ல எண்ணத்தினால் செயல்களில் கூடுதல் நன்மை கிடைக்கும். நன்றி மறந்தவரை பெருந்தன்மையுடன் மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும்.

கும்பம் : செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானமும் அக்கறையும் அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் பணம் செலவு அதிகரிக்கும். பிறரின் உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம் : குடும்ப பெரியவர்களின் சொல்லுக்கு நல்ல மதிப்பு மரியாதை தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணவரவும், நன்மையும் உருவாகும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: