Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி,
20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு 3:19 வரை;
அதன்பின் அஷ்டமிதிதி, திருவாதிரை நட்சத்திரம் பகல் 3:37 மணி வரை;
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7 : 30 – 9 : 00 மணி
ராகு காலம் : மாலை 4 : 30 – 6 : 00 மணி
எமகண்டம் : பகல் 12 : 00 – 1 : 30 மணி
குளிகை : பகல் 3 : 00 – 4 : 30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
பொது : சூரியன் வழிபாடு.

மேஷம் : உங்களின் நற்செயல்கள் அனுகூல பலன்களை பெற்று தரும். இஷ்ட தெய்வ அருளால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம் : சிலர் சுயலாபத்திற்காக உதவ முன் வருவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு வளர்ச்சியை உருவாக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல கூடாது.

மிதுனம் : செயலில் லட்சிய நோக்கம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கடகம்: அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயம் பேச வேண்டாம். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவும்.

சிம்மம் : சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். பலராலும் அனுகூலம் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவீர்கள். பணப்பரிவர்த்தனை சீராகும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

கன்னி : வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய யுக்தி பயன்படுத்துவது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.

துலாம்: எதிர் வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர் தரும் உணவை உண்ண கூடாது.

விருச்சிகம்: உருவாகிற கூடுதல் பணிகளால் சிரமம் ஏற்படலாம். பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரம் ஓரளவு வளர்ச்சி பெறும். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். பொருட்கள் இரவல் கொடுக்க, வாங்க கூடாது.

தனுசு: வாழ்வில் புதிய வசந்த காலம் உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். அபரிமிதமான அளவில் பணவரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவு வரும்.

மகரம் : முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிகம் பணி புரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உருவாகும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கை தரும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

மீனம் : நண்பரின் யதார்த்த பேச்சு சங்கடம் ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவீர்கள். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 29/04/2020

இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி, 29.4.2020 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி ...

%d bloggers like this: