Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 20/09/2019

இன்றைய நாள் எப்படி 20/09/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 3ம் தேதி, மொகரம் 20ம் தேதி,
20.9.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, சஷ்டி திதி மாலை 4:49 வரை
அதன் பின் சப்தமி திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 8:19 வரை
அதன் பின் ரோகிணி நட்சத்திரம், சித்த–மரணயோகம்

நல்ல நேரம் : காலை 9:00 –10:30 மணி
ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 –4:30 மணி
குளிகை : காலை 7:30 –9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
பொது : முருகன், மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம் : எதிர்கால லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. இயந்திர பிரிவு பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

ரிஷபம் : சான்றோர்களின் ஆசி கிடைக்கும். புதிய அணுகுமுறையால் தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறை சரி செய்வீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்த தொல்லை குறையும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிதுனம் : நீங்கள் தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர் கடமையை உணர்த்துவர். தொழில், வியாபாரத்தில் அனுகூலங்களை பாதுகாப்பது நல்லது. பணவரவு கூடுதல் முயற்சியால் கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கடகம் :இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி தருவீர்கள்.

சிம்மம் : வாழ்வில் வளம் பெற புதிய சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. உபரி பணவரவை உரிய சேமிப்பாக மாற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கன்னி : உங்களின் சிரம சூழ்நிலையை பிறரிடம் சொல்ல வேண்டாம். மனதை ஒருமுகப்படுத்துவதால் சில நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவது அவசியம். பண செலவில் சிக்கனம் வேண்டும். பொருட்கள் இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : தாமதமான செயலில் புதிய திருப்பம் ஏற்படும். உண்மை நிலவரம் உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம் : உங்கள் பேச்சு மற்றும் செயலில் திறமை வளரும். எதிரி இடம் மாறி போகிற அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள்.

தனுசு : முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடுவீர்கள்.

மகரம் : மனதில் இனம் புரியாத வருத்தம் வரலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில், வியாபாரம் செழிக்க அக்கறையுடன் பணி புரிவது அவசியம். பணவரவு ஓரளவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : பிறருடன் பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றவும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மீனம் : சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். உங்களின் தனித்திறமை நண்பர்களிடம் வரவேற்பு பெறும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பாராட்டு, வெகுமதி பெறுவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: