Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 20/08/2019

இன்றைய நாள் எப்படி 20/08/2019

இன்று!
விகாரி வருடம், ஆவணி மாதம் 3ம் தேதி, துல்ஹஜ் 18ம் தேதி,
20.8.19, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி இரவு 3:07 வரை,
அதன்பின் சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம் இரவு 9:11 வரை,
அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00–4:30 மணி
எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
குளிகை : பகல் 12:00–1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
பொது : துர்க்கை வழிபாடு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மேஷம் : மனதில் நம்பிக்கை வளர்ப்பது அவசியமாகும். தொழில் வியாபாரத்தில் உள்ள குறைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம்.அதிக நிபந்தனையுடன் பணக்கடன் பெறக்கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம் : பலநாள் தாமதமான பணி ஒன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் அனுகூலம் ஒருசேரக் கிடைக்கும்.பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள்.

மிதுனம் : சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள். வெற்றி பெற எளிதான வழிபிறக்கும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். நிலுவைப் பணம் வந்து சேரும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்வர். எதிர்கால நலன் கருதி விலகுவது நல்லது. தொழிலில் குறையை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும்.

சிம்மம் : உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். சகதொழில் சார்ந்த எவரிடமும் சச்சரவு பேசக்கூடாது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டு.அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கன்னி : நேர்மைக்குணம் அதிகம் பின்பற்றுவீர்கள். திறமை வளர்ந்து பல மடங்கு நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம் : உங்கள் பேச்சில் ரசனை மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி புதிய அனுபவம் தரும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். தொழில்; வியாபரம் கூடுதல் பணி உதவும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத வாசனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

தனுசு : உங்கள் செயல்திறன் கண்டு சிலர் பொறாமை கொள்வர். பொறுமை காப்பதால் சிரமம் தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியமாகும். பணச்செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் : வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வாய்ப்பு வரும். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : சிலர் உதவுவது உங்களுக்கு போல பாசாங்கு செய்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள். பணவரவு தாமதம் ஆகலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம் : உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். உயர்ந்த செயல்களால் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகும். உபரி பணவருமானம் கிடைக்கும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 30.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...