Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 20/03/2019

இன்றைய நாள் எப்படி 20/03/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 6ம் தேதி, ரஜப் 12ம் தேதி,
20.3.19 புதன்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி காலை 10:02 வரை;
அதன் பின் பவுர்ணமி திதி, பூரம் நட்சத்திரம் மதியம் 3:56 வரை;
அதன் பின் உத்திரம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
பொது : ஹோலி, பவுர்ணமிவிரதம், கிரிவலம், மலைக்கோவில் வழிபாடு, கரிநாள்.

 

மேஷம்: பொது இடங்களில் அதிகம் பேச வேண்டாம். தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பிள்ளைகளால் உதவி உண்டு.

ரிஷபம்: சிலரது பேச்சு உங்கள் மனதை கஷ்டப்படுத்தலாம். குடும்பத்தினரின் ஆலோசனை நம்பிக்கையளிக்கும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணவரவு மிதமாக இருக்கம். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர்.

மிதுனம்: மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் பெற்றோர்க்கு பெருமை தேடித் தருவர்.

கடகம்: உதவி பெற்றவரும் உதாசீனமாக நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கூடுதல் முயற்சி தேவை. அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

சிம்மம்: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். லாபம் பன்மடங்கு உயரும். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும். பெண்கள் புத்தாடை வாங்குவர்.

கன்னி: சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமார். பணியாளர்கள் நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம். பெண்களுக்கு திடீர் செலவால் திணறுவர். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பேற்க வேண்டாம்.

துலாம்: மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். தொழில் வியாபாரம் செழித்து நன்மை காண்பீர்கள். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

விருச்சிகம்: மனதில் உற்சாகம் மேலோங்கும். தாமதமான பணிகள் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

தனுசு: சொல்லும், செயலும் முரண்படலாம் கவனம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் வாய்ப்பு உருவாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். .பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்: செயல்களில் அனுகூலம் பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும். புத்திரரின் செயல் மனதிற்கு நிம்மதியளிக்கும்.

கும்பம்: குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். .தொழிலில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

மீனம்: திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். புதிய வீடு வாகனம் வாங்க வாய்ப்புண்டு. பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் குடும்ப வளர்ச்சி கண்டு மகிழ்வர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: