Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 20/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 20/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், தை மாதம் 6ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 24ம் தேதி,
20.1.20 திங்கட்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி நாளை அதிகாலை 4:17 வரை,
அதன்பின் துவாதசி திதி, அனுஷம் நட்சத்திரம் நள்ளிரவு 1:49 வரை,
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்

நல்ல நேரம்: காலை 6:00-7:30 மணி
ராகு காலம்: காலை 7:30-9:00 மணி
எமகண்டம்: காலை 10:30-12:00 மணி
குளிகை: பகல் 1:30-3:00 மணி
சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்
சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி
பொது ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம்: சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். தொழில், வியாபரத்தில் கூடுதல் பணி உதவும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத வாசனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
ரிஷபம்: சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள். வெற்றி பெற எளிதான வழிபிறக்கும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். நிலுவைப் பணம் வந்து சேரும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.
மிதுனம்: நேர்மை குணம் அதிகம் பின்பற்றுவீர்கள். திறமை வளர்ந்து நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அடைவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
கடகம்: செயல்களில் நிதானம் வேண்டும். சகதொழில் சார்ந்தவரிடம் சச்சரவு பேசக்கூடாது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டு. பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம்.
சிம்மம்: மனதில் நம்பிக்கை வளர்ப்பது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள குறைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக நிபந்தனையுடன் கடன் பெறக்கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கன்னி: பலநாள் தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் அனுகூலம் கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள்.
துலாம்: குடும்பத்திற்கான தேவை அதிகரிக்கும். பழகியவர்களில் சிலர் உதவுவது போல பேசுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு சில மாற்றம் செய்வீர்கள். பணவரவு கிடைக்க தாமதம் ஆகலாம். மாணவர்கள் படிப்பில் உரிய கவனம் தேவை.
விருச்சிகம்: பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். உயர்ந்த செயல்களால் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகும். உபரி வருமானம் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
தனுசு: செயல்திறன் கண்டு சிலர் பொறாமை கொள்வர். பொறுமை காப்பதால் சிரமம் தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியமாகும். செலவு அதிகரிக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
மகரம்: பேச்சில் ரசனை மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி புதிய அனுபவம் தரும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.
கும்பம்: சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்வர். எதிர்கால நலன் கருதி விலகுவது நல்லது. தொழிலில் குறையை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். தியானம், தெய்வ வழிபாடு அமைதி தரும்.
மீனம்: வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வாய்ப்பு வரும். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 08/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 16ம் தேதி, 8.7.2020 புதன்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி ...

%d bloggers like this: