Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 20/01/2018

இன்றைய நாள் எப்படி 20/01/2018

இன்று!

ஹேவிளம்பி வருடம், தை மாதம் 7ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 2ம் தேதி,
20.1.2018 சனிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி மதியம் 1:03 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, சதயம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:18 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், அமிர்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : விநாயகர், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: மனதில் அமைதி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் பின்பற்றுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம்: சிறு செயல் கூட பல மடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் ஆர்வமுடன் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். உறவினருக்கு தேவையறிந்து உதவுவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மிதுனம்: செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில்,வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வகையில் அதிக செலவு நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

கடகம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். கூடுதல் முயற்சியினால் தொழில் வியாபார மந்த நிலை சரியாகும். பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளகைளால் உதவி உண்டு.

சிம்மம்: எதிர்பார்த்த செயலில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட உழைப்பால் தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும்.

கன்னி: ரசனையுடன் செயலில் ஈடுபடுவீர்கள். தங்களின் நற்செயலை குடும்பத்தினர் மனமுவந்து பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் சிரமம் விலகும். வருமானம் படிப்படியாக உயரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

துலாம்: பணிகளை நிறைவேற்ற கூடுதல் முயற்சி தேவைப்படும். நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். சீரான ஓய்வு புத்துணர்வு தரும்.

விருச்சிகம்: சிலரது செயலால் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பணிகளில் தகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் சுமார். ஆடம்பரச் செலவை தவிர்ப்பது நல்லது. தியானம், இஷ்ட தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.

தனுசு: சமயோசித குணத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.

மகரம்: சொந்த உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் உண்டாகும்.

கும்பம்: பெரியவர்களின் சொற்களை மதிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணவரவு கிடைக்கும். மனைவியின் அன்பை பெற்று மகிழ்வீர்கள்.

மீனம்: முக்கிய தேவை நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். மனைவியின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: