Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 19/09/2019

இன்றைய நாள் எப்படி 19/09/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 19ம் தேதி,
19.9.19 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி மாலை 4:52 வரை
அதன் பின் சஷ்டி திதி, பரணி நட்சத்திரம் காலை 7:29 வரை
அதன் பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த- மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30-3:00 மணி
எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
குளிகை : காலை 9:00–10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : விசாகம்
பொது : கார்த்திகை விரதம், முருகன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

 

மேஷம் : முன்னர் செய்த நல்ல செயலுக்கு உரிய நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : இடையூறு செய்பவரை அடையாளம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி மனதை கஷ்டப்படுத்தும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிதுனம் : குடும்ப உறுப்பினர்கள் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. சுப செலவு செய்து மகிழ்வீர்கள்.

கடகம் : உங்களின் தனி திறமையை வெளிப்படுத்துவீர்கள். தாமதமான பணி ஒன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

சிம்மம் : உங்கள் சிரமம் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். இஷ்ட தெய்வத்தின் கருணையால் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான வளர்ச்சி இருக்கும். பண செலவில் சிக்கனம் நல்லது. உடல் நலத்தில் கவனம் வேண்டும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கன்னி : ஆரவாரம் தவிர்ப்பதால் அன்றாட பணி சரியாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற மாற்று உபாயம் உதவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

துலாம் : திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அபிவிருத்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவு வரும்.

விருச்சிகம் : உறவினர் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

தனுசு : அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயம் பேச கூடாது. தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற தாமதமாகலாம். நிர்ப்பந்தத்தின் பேரில் பொருட்கள் எதுவும் வாங்க வேண்டாம். தியானம், தெய்வ வழிபாடு மனம் நிம்மதி பெற உதவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : உங்களின் பொறுப்பான செயல் விமர்சிக்கப்படலாம். சக தொழில் வியாபாரம் சார்ந்தவர்களுடன் சச்சரவு பேச வேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் பண பொறுப்பு ஏற்க வேண்டாம்.

கும்பம் : மனதில் சில மாற்றங்களை பின்பற்றுவீர்கள். இடையூறாக செயல்பட்டவர் விலகி போவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பரிசு, பாராட்டு பெறுவர்.

மீனம் : திட்டமிட்டு செயல்படுவதால் பணிகளில் உரிய நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு அவசியம். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். சுற்று சூழ்நிலை தொந்தரவினால் நித்திரை கெடலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: