Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 19/08/2018

இன்றைய நாள் எப்படி 19/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 3ம் தேதி, துல்ஹஜ் 7ம் தேதி,
19.8.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 6:37 வரை;
அதன் பின் நவமி திதி, அனுஷம் நட்சத்திரம் இரவு 12:02 வரை;
அதன்பின் கேட்டை நட்சத்திரம், மரணயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : ஆவணி ஞாயிறு விரதம், சூரியன் வழிபாடு.

மேஷம்: அதிர்ஷ்ட தேவதையின் அருள்பார்வை கிடைக்கும். உங்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். தொழில், வியாபார வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். ஆரோக்கியம் பலம் பெறும்.

ரிஷபம்: சூழ்நிலை அறிந்து பிறரிடம் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மிதுனம்: பேச்சில் உண்மை நிறைந்திருக்கும். துவங்கும் செயல் முழு அளவில் வெற்றி பெறும். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி அடையும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: நண்பரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம்: சிலரது பேச்சு சங்கடத்தை உருவாக்கும். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். தவிர்க்க இயலாத வகையில் திடீர் செலவு ஏற்படலாம். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.

கன்னி: மனதில் இருந்த சஞ்சலம் விலகும். எதிர்கால நலன்களை கவனத்தில் கொண்டு செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணி முன்னேற்ற பாதையில் செல்லும். தொழிலில் உற்பத்தி, விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும். லாபம் கூடும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

துலாம்: அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு தெய்வ அருளால் சரியாகும். பணவரவு சராசரி அளவில் கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: நற்செயலில் ஈடுபட்டு பெருமை காண்பீர்கள். தொழில் வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் நகை, புத்தாடை வாங்க யோகம் உண்டு.

தனுசு: அவசரப்பணி உருவாகி சிரமம் தரலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உடல்நலனை பாதுகாக்க சிகிச்சை தேவைப்படலாம்.

மகரம்: இனிய நினைவுகளால் மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில் வியாபாரத்தில் உருவான இடையூறு எளிதாக விலகும். கூடுதல் பணவரவால் கடன் அடைபடும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

கும்பம்: கடந்த கால செயலின் பயனை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். மாமன், மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

மீனம்: வாக்குவாதம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது.தொழில் வியாபாரம் சீராக கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

 

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: