Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 19/05/2019

இன்றைய நாள் எப்படி 19/05/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 13ம் தேதி,
19.5.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, பிரதமை திதி இரவு 2:57 வரை;
அதன்பின் துவிதியை திதி, அனுஷம் நட்சத்திரம் இரவு 3:20 வரை;
அதன்பின் கேட்டை நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பரணி
பொது : சூரியன் வழிபாடு.

 

மேஷம் : சிறிய பணிகளுக்கும் அதிக முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். முக்கியச் செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வாகனத்தில் கவனம் பின்பற்றவும்.

ரிஷபம்: முன்பு பெற்ற உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபார நடைமுறையில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மிதுனம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அபிவிருத்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கடகம் : உறவினரின் பாசம் வியப்பைத் தரலாம். தொழில், வியாபாரம் சார்ந்த சிரமங்களை கவனமுடன் சரிசெய்வது நல்லது. புதிய முயற்சியால் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பயன்தராத பொருள் எதுவும் விலைக்கு வாங்க வேண்டாம்.

சிம்மம்: உங்களின் பொறுப்பான செயல் தவறாக விமர்சிக்கப்படலாம். சக தொழில் வியாபாரம் சார்ந்தவர்களுடன் சச்சரவு பேச வேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

கன்னி: குடும்ப உறுப்பினர்கள் அதிக பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. மனம் விரும்பிய வகையில் சுபச் செலவு செய்து மகிழ்வீர்கள்.

துலாம்: பிறர் செயலை குறை சொல்ல வேண்டாம். ஆரவாரம் தவிர்ப்பதால் பணி சரியாக நிறைவேறும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

விருச்சிகம்: நல்ல செயலுக்கு உரிய நற்பலன் தேடி வரும். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேசக்கூடாது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகலாம். நிர்ப்பந்தத்தின் பேரில் பொருட்கள் விலைக்கு வாங்க வேண்டாம். தியானம், தெய்வ வழிபாடு மனதில் நிம்மதியை தரும்.

மகரம்: கடந்த நாட்களில் இடையூறாக செயல்பட்டவர் விலகிப் போவார். தொழில், வியாபாரம் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மாணவர்கள் படிப்புடன், கலைகளும் பயில்வர்.

கும்பம்: உங்களின் தனித்திறமையை நன்கு வெளிப்படுத்துவீர்கள். தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம்: பெரியவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளின் மூலம் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவு செய்வீர்கள். சுற்றுச் சூழ்நிலை தொந்தரவினால் நித்திரை தாமதமாகலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: