Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 19/04/2019

இன்றைய நாள் எப்படி 19/04/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 5ம் தேதி, ஷாபான் 12ம் தேதி,
18.4.19, வியாழக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:10 வரை;
அதன்பின் பவுர்ணமி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 9:11 வரை;
அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30-3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு. முகூர்த்தநாள்

 

மேஷம்: உற்சாக மனதுடன் பணிபுரிவீர்கள். தொழில் வளர்ச்சியால் பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் விருந்து விழாவில் கலந்து கொள்வர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

ரிஷபம்: பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். குடும்ப விஷயம் குறித்து பிறரிடம் பேச வேண்டாம்.கடின உழைப்பால் தொழிலில் சீரான வளர்ச்சி உருவாகும்.அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் கையாளவும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க கூடாது.

மிதுனம்: மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு உறவினரால் செலவு அதிகரிக்கும். புத்திரரின் நற்செயல் ஆறுதல் அளிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.

கடகம்: கடந்த கால உழைப்பின் பலன் தேடி வரும். நல்லவர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு வளர்ச்சி பெறும். பிள்ளைகளுக்காக தாராள பணம் செலவு செய்வீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

சிம்மம்: திட்டமிட்ட பணிகளில் தாமதம் உருவாகலாம்.தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். பெண்களுக்கு பேச்சில் நிதானம் தேவை.

கன்னி: உறவினர் அன்பைக் கண்டு மகிழ்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

துலாம்: எதிரியால் உருவான தொந்தரவு மறையும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். பணியாளர்கள் சகஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவர். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். நண்பரால் உதவி உண்டு.

விருச்சிகம்: பேச்சு, செயலில் எளிமை நிறைந்திருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி மேற்கொள்வீ்ர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு: திட்டமிட்டு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு சேமிப்பாக மாறும். மாமன், மைத்துனரின் தேவையறிந்து உதவுவீர்கள்.

மகரம்: நண்பருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த மறைமுகப்போட்டி மறையும். உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். கூடுதல் பணவரவால் சேமிப்பு உயரும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கும்பம்: திட்டமிட்ட பணியில் திடீர் மாற்றம் ஏற்படலாம். தொழிலில் அதிக உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகும். மற்றவர் பார்வையில் அதிக பணம் செலவு செய்வதை தவிர்க்கவும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

மீனம்: முக்கியமான பணி நிறைவேற தாமதமாகலாம். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். நண்பரை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: