Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 19/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 19/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், தை மாதம் 5ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 23ம் தேதி,
19.1.20 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 7:23 வரை,
அதன் பின் தசமி திதி நாளை அதிகாலை 4:48 வரை, விசாகம் நட்சத்திரம் நள்ளிரவு 2:32 வரை,
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: மாலை 4:30-6:00 மணி
எமகண்டம்: பகல் 12:00-1:30 மணி
குளிகை: பகல் 3:00-4:30 மணி
சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்
சந்திராஷ்டமம்: அசுவினி
பொது சூரியன் வழிபாடு.

 

மேஷம்: ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எதிர்மறையாக தெரிந்த செயல் நன்மை தரும். அதிக உழைப்பு தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும்.
ரிஷபம்: செயல்களில் நேர்த்தி உருவாகும். உழைப்பிற்கான பலன் அதிகரிக்கும். தொழில்,வியாபாரத்தில் போட்டி விலகும். ஆதாய பணவரவினால் சேமிப்பு கூடும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
மிதுனம்: பணி தாமதம் ஆவதால் சஞ்சலம் உருவாகும். நல்லோரின் ஆலோசனை வெற்றி தரும். தொழில், வியாபாரம் சீராக கூடுதல் பணிபுரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.
கடகம்: செயல்கள் அளவான வெற்றியைத் தரும். தொழில், வியாபாரத்தில் நேரம் தவறாமையை பின்பற்றுங்கள். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். சந்தோஷ நிகழ்வுகளை நண்பர்கள் பகிர்ந்து கொள்வர்.
சிம்மம்: எவரிடமும் கருணை மனதுடன் பழகுவீர்கள். அவமதித்து பேசியவர், அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.
கன்னி: சிறு செயலும் கடினமாக தோன்றும். உறவினரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபார வளர்ச்சிக்கு அதிக உழைப்பு உதவும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவினை உண்ணக்கூடாது.
துலாம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். எதிர்கால தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பதவி பெற அனுகூலம் வளரும்.
விருச்சிகம்: வேண்டாத நபரை பொது இடத்தில் சந்திக்க நேரிடலாம். பழைய நினைவுகள் தொந்தரவு தரும். தொழில், வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவது அவசியம். பணவரவு அளவாக கிடைக்கும். சத்தான உணவினை உண்டு மகிழ்வீர்கள்.
தனுசு: மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சந்தோஷ முகத்தோற்றம் பெறுவீர்கள். தொழில்,வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
மகரம்: புதியவர் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்: குறை சொல்ல சிலர் காத்திருப்பர். அளவுடன் பேசுவதால் நன்மை பெறலாம். தொழில், வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தவும். கடன் பெறுவீர்கள். தகுந்த ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.
மீனம்: மனதில் குழப்பம் ஏற்படலாம். முக்கியமான செயல் நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் மாற்றம் செய்வது அவசியமாகும். கடன் பெறுவீர்கள். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி, 21.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி ...

%d bloggers like this: