Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 18/11/2018

இன்றைய நாள் எப்படி 18/11/2018

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 2ம் தேதி, ரபியுல் அவ்வல் 9ம் தேதி,
18.11.18 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, தசமி திதி காலை 11:51 வரை;
அதன் பின் ஏகாதசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 3:36 வரை;
அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : சூரியன் வழிபாடு.

மேஷம்: செயல்களில் குளறுபடி ஏற்படலாம். பணிகளில் முன்யோசனை பின்பற்றவும். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். செயல்களில் நிதானம் பின்பற்றவும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதம் ஆகலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம் : சுற்றுத்தார் அன்பு பாராட்டுவர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துங்கள். பணப்பரிவர்த்தனை நல்ல முன்னேற்றம் பெறும். பிள்ளைகள் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

மிதுனம் : குடும்பத்தில் இருந்த குழப்பமான சூழ்நிலை சரியாகும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி சிறந்து இனிய அனுபவம் தரும். அதிர்ஷ்டகரமாக கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம் : சிலர் மாறுபட்ட குணத்துடன் பேசுவர். செயல்களில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில் வியாபார நடைமுறையில் சிறு அளவிலான சுணக்கம் உருவாகும். குடும்பச் செலவில் சிக்கனம் வேண்டும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

சிம்மம் : செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம்.பொது இடங்களில், எவருடனும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் தவறாமல் பின்பற்றவும்.

கன்னி : மனதில் நம்பிக்கை ஒளி பிரகாசிக்கும். முக்கிய செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் செழித்து புதிய சாதனை உருவாகும். கூடுதல் வருமானம் கிடைக்கும். வீடு வாகனத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பிள்ளைகள் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

துலாம்: சத்தியத்தின் மீதான நம்பிக்கை வளரும். தொழில் வியாபார நடைமுறை சிறப்பாக முன்னேற்றம் பெறும். உபரி வருமானம் உண்டு. பணப்பரிவர்த்தனை நல்ல முன்னேற்றம் பெறும். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்: சொந்த பிரச்னைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். மனதை ஒருமுகப்படுத்துவதால் சில நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு அவசியம். குடும்பச் செலவில் சிக்கனம் வேண்டும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு: செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். நண்பரிடம் தகுந்த ஆலோசனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மகரம் : உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். கூடுதல் வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். அரசியல்வாதிகள் அரசு சார்ந்த உதவி பெற அனுகூலம் உண்டு.

கும்பம் : பணி நிறைவேற தாமதமாகலாம். நம்பிக்கையுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை மந்தமாக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

மீனம் : செயல் திறமையில் மேன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். உற்பத்தி விற்பனை அதிகரித்து கூடுதல் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு வரும். வீடு வாகனத்தில் அபிவிருத்தி செய்வீர்கள்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: