Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 18/08/2019

இன்றைய நாள் எப்படி 18/08/2019

இன்று!
விகாரி வருடம், ஆவணி மாதம் 1ம் தேதி, துல்ஹஜ் 16ம் தேதி,
18.8.19, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி இரவு 12:01 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 4:44 மணி வரை,
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00–1:30 மணி
குளிகை : பகல் 3:00–4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
பொது : சூரியன் வழிபாடு.

 

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மேஷம் : உங்கள் மனதில் கூடுதல் தைரியம் ஏற்படும். எதிர்ப்புக்களை சாதுர்யமாக வெல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

ரிஷபம் : ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தாயின் அன்பும், ஆசியும் மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான பணிபுரிவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மிதுனம் : சொந்த விஷயம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தை உருவாக்கும். பணவரவை விட புதிய இனங்களில் செலவு ஏற்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : உறவினரின் பேச்சை தொந்தரவாக கருதுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழிகளை சிந்திப்பீர்கள். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடல்களை ரசிப்பதால், மனம் புத்துணர்வு பெறும்.

சிம்மம் : இடையூறு விலகி நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

கன்னி : உங்களின் தனித்திறமையை நண்பர் பாராட்டுவர். முயற்சிக்கு உரிய பலன் முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரம் செழித்து மனநிறைவை உருவாக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை நகை வாங்குவர்.

துலாம் : போட்டி, பந்தயத்தில் ஈடுபடக்கூடாது. தொழிலில் உள்ள குளறுபடியை சரிசெய்வதால் ஓரளவு வளர்ச்சி கிடைக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் பணம் கடன் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : முக்கியமான பணி நிறைவேற தாமதம் ஆகலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரம் செழிக்க சில மாற்றம் செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல் நலம் சீராக உதவும்.

தனுசு : புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் : இடையூறு செய்தவர்களை அடையாளம் காண்பீர்கள். புதிய முயற்சி ஓரளவு நன்மை தரும். தொழில், வியாபாரம் தாமதகதியில் இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர் பாராட்டி ஊக்கப்படுத்துவர். தொழில், வியாபார வளர்ச்சியில் திருப்திகர முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மீனம் : பணிகளில் அதிக கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு வரும். சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...