Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 18/08/2018

இன்றைய நாள் எப்படி 18/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 2ம் தேதி, துல்ஹஜ் 6ம் தேதி,
18.8.18 சனிக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி காலை 6:18 வரை;
அதன்பின் அஷ்டமி திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 10:43 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
பொது : சனீஸ்வரர் வழிபாடு, கரிநாள்.

மேஷம்: செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.

ரிஷபம்: வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரம் திருப்திகரமான அளவில் வளர்ச்சி பெறும். ஆதாயம் உயரும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: இடையூறு செய்பவரை விட்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் நல்லது. இயந்திரப்பிரிவு பணியாளர்கள் விழிப்புடன் பணியாற்றுவது அவசியம்.

கடகம்: செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு வகைகளை தவிர்க்கவும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.

சிம்மம்: சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயரும் சலுகையும் பெறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெற்று மகிழ்வர்.

கன்னி: உறவினரிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும். திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். நேரத்திற்கு உண்பதால் உடல்நலனை பாதுகாக்கலாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.

துலாம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் கலையம்சத்துடன் செயல்படுவர். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: கூடுதல் பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமார். பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும். பெண்களுக்கு தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

தனுசு: உறவினர், நண்பர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். லாபம் கூடும். சுபவிஷயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.

மகரம்: நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் இருந்த அதிருப்தி மறையும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் சேமிப்பாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

கும்பம்: உங்களின் நற்செயலை சிலர் குறைகூறி கூறலாம். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம்.வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம்: சிலர் சுயலாபம் பெற உங்களை புகழ்ந்து பேசுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

 

 

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 12/12/2018

இன்று! விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 26ம் தேதி, ரபியுல் ஆகிர் 4ம் தேதி, 12.12.18, புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி ...

%d bloggers like this: