Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 18/07/2019

இன்றைய நாள் எப்படி 18/07/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 2ம் தேதி, துல்ஹாதா 14ம் தேதி,
18.7.19 வியாழக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி நாள் முழுவதும்,
திருவோணம் நட்சத்திரம் இரவு 1:52 வரை;
அதன் பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30-3:00 மணி
எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
குளிகை : காலை 9:00-10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
பொது : திருவோண விரதம், பெருமாள், தட்சிணாமூர்த்தி வழிபாடு, கரிநாள்.

 

மேஷம்: சிலரது செயலால் மனதில் வருத்தம் தரலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவும். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். உணவுப் பொருளின் தரமறிந்து உண்பது நல்லது.

ரிஷபம்: புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடலாம். சராசரி அளவில் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதமாகலாம். உணவு உண்பதில் கட்டுப்பாடு தேவை.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிதுனம்: அக்கம் பக்கத்தினருடன் அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

கடகம்: பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடையும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். மாணவர்கள் நன்கு படித்து பாராட்டு பரிசு பெறுவர்.

சிம்மம்: பிறரது அதிருப்திக்கு ஆளாகாதபடி நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கன்னி : முக்கிய செயலில் கூடுதல் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். சுற்றுப்புற சூழ்நிலையால் நித்திரை தாமதமாகலாம்.

துலாம்: லட்சியநோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர் மற்றும் உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

விருச்சிகம்: குறைவாக பேசுவதால் சிரமம் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணச்செலவில் சிக்கனம் அவசியமாகும். தாயின் ஆறுதல் வார்த்தை மனதில் நம்பிக்கையை வளர்க்கும். தெய்வ வழிபாடு அவசியம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தனுசு: உங்களின் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் அபிவிருத்தியாகும். உபரி பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும்.

மகரம்: வீண்பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். வருமானம் மிதமாக இருக்கும். பெண்கள் நகை பணம் பாதுகாப்பில் கவனம் வேண்டும். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : நற்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மனநிறைவை ஏற்படுத்தும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவர். குடும்பத்துடன் உறவினர் இல்லம் சென்று வருவீர்கள்.

மீனம்: உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். பணவரவு அதிகரிக்கும். உறவினர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 06/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 20ம் தேதி, ரபியுல் ஆகிர் 8ம் தேதி, 6.12.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: