Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி,
17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, நாளை அதிகாலை 4:25 வரை;
அதன்பின் பவுர்ணமி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 3:22 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : நரசிம்ம ஜெயந்தி, மகாலட்சுமி வழிபாடு, முகூர்த்தநாள்.

மேஷம் : இனிய எண்ணங்களால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர் மற்றும் நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். சேமிக்கும் அளவில் பணவருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். நண்பரின் உதவியால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம் : பணித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம்.

கடகம் : நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

சிம்மம் : திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழிலpல் உற்பத்தி, வியாபாரம் செழிக்கும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கூடுதல் சொத்து வாங்க திட்டமிடுவீர்கள்.

கன்னி : சிலர் உங்களுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பர். செயல்களில் கவனம், தற்காப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.

துலாம் : பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நண்பர், உங்களுக்கு தேவையான உதவியை வழங்குவார். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.

 

விருச்சிகம் : செயல்களில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

தனுசு : லட்சிய எண்ணத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி திருப்திகரமாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.
மகரம் : மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நற்செயல் பெருமையை தேடித்தரும்.

கும்பம் : குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியில் நடத்தும். தொழில், வியாபார நடைமுறை சீராகும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

மீனம் : உங்கள் மனம் புகழ்ச்சியை விரும்பும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். பணக்கடன் பெறுவீர்கள். பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/07/2019

இன்று! விகாரி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 15ம் தேதி, 19.7.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி ...

%d bloggers like this: