Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 18/04/2019

இன்றைய நாள் எப்படி 18/04/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 4ம் தேதி, ஷாபான் 11ம் தேதி,
17.4.19, புதன்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி இரவு 9:10 வரை;
அதன்பின் சதுர்த்தசி திதி, உத்திரம் நட்சத்திரம் இரவு 10:26 வரை;
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்த-மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
* குளிகை : காலை 10:30-12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
பொது : பிரதோஷம். நந்தீஸ்வரர் வழிபாடு. முகூர்த்தநாள்.

 

 

மேஷம்: ஆன்மிக சிந்தனையுடன் பணிபுரிவீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் புதிய சாதனை ஏற்படும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: பேச்சு, செயலில் நிதானம் வெளிப்படும். புதியவர் வருகையால் தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். மிதமான வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.

மிதுனம்: பொது இடங்களில் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். சராசரி அளவில் வருமானம் வரும். பணியாளர்கள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும். பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர்.

கடகம்: எதிர்ப்பாளரால் உருவான தொந்தரவு விலகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் கூடும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

சிம்மம்: திட்டமிட்ட பணிகளில் குளறுபடி ஏற்படலாம். நலம் விரும்புவரின் ஆலோசனை நிம்மதிக்கு வழிவகுக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல் நலனைப் பாதுகாக்கும்.

கன்னி: பொதுநலன் கருதி செயல்படுவீர்கள். நற்பெயரும் புகழும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை உயர்வால் லாபம் கூடும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.

துலாம்: பகைவரிடம் விலகி கவுரவம் பாதுகாத்திடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பு தவிர மற்ற விஷயத்தில் ஈடுபட வேண்டாம்.

தனுசு: தடைகள் விலகி வாழ்வில் அனுகூலம் காண்பீ்ர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்ப தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நிர்வாகத்தின் பாராட்டு பெறுவர்.

மகரம்: எண்ணத்தில் உறுதி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட தடைகளை முறியடிப்பீர்கள். லாபம் சீராக இருக்கும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

கும்பம்: எதிர்பார்ப்பு நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். தாயின் ஆறுதல்பேச்சு நம்பிக்கை தரும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர்.

மீனம்: ஆன்மிக நம்பிக்கை மேலோங்கும். தொழிலில் விற்பனை அதிகரிப்பால் சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர் பெண்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: