Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 18/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 18/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், தை மாதம் 4ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 22ம் தேதி,
18.1.20 சனிக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 9:19 வரை,
அதன்பின் நவமி திதி, சுவாதி நட்சத்திரம் நள்ளிரவு 3:34 வரை,
அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த-சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: காலை 9:00-10:30 மணி
எமகண்டம்: பகல் 1:30-3:00 மணி
குளிகை: காலை 6:00-7:30 மணி
சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்
சந்திராஷ்டமம்: ரேவதி
பொது நரசிம்மர், சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: இடையூறு விலகி நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
ரிஷபம்: தனித்திறமையை நண்பர் பாராட்டுவர். முயற்சிக்கு பலன் முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரம் செழித்து மனநிறைவை உருவாக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை வாங்குவர்.
மிதுனம்: உறவினரின் பேச்சை தொந்தரவாக கருதுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழிகளை சிந்திப்பீர்கள். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். பொருள் இரவல் கொடுக்க வேண்டாம். இசையை ரசிப்பதால், மனம் புத்துணர்வு பெறும்.
கடகம்: பந்தயத்தில் ஈடுபடக்கூடாது. தொழிலில் குளறுபடியை சரிசெய்வதால் வளர்ச்சி கிடைக்கும். அத்தியாவசிய செலவுக்கு கடன் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.
சிம்மம்: ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தாயின் அன்பும், ஆசியும் ஊக்கம் தரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
கன்னி: முக்கியமான பணி நிறைவேற தாமதம் ஆகலாம். மனைவியின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரம் செழிக்க மாற்றம் செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல் நலம் சீராக உதவும்.
துலாம்: மனதில் தைரியம் ஏற்படும். எதிர்ப்புக்களை சாதுர்யமாக வெல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும். புத்திரர்கள் விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள்.
விருச்சிகம்: பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு வரும். சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.
தனுசு: புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தேக்கம் அடைந்த பணியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
மகரம்: செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். குடும்பத்தினர் ஊக்கப்படுத்துவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.
கும்பம்: சொந்த விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.
மீனம்: இடையூறு செய்தவர்களை அடையாளம் காண்பீர்கள். புதிய முயற்சி நன்மை தரும். தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு அமைதியை தரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி, 21.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி ...

%d bloggers like this: