Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 17/12/2017

இன்றைய நாள் எப்படி 17/12/2017

ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 2ம் தேதி, ரபியுல்அவ்வல் 27ம் தேதி, 17.12.17 ஞாயிற்றுக் கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி காலை 10:33 வரை; அதன் பின் அமாவாசை திதி, கேட்டை நட்சத்திரம் நாள் முழுவதும், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
* ராகு காலம் :
மாலை 4:30 – 6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:0 – 0-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00 – 4:30 மணி

* சூலம் : மேற்கு
* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : கார்த்திகை
* பொது : சூரியன் வழிபாடு. அனுமன் ஜெயந்தி.

மேஷம் : முன்னேற்பாடுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் சிக்கல் ஏற்ப ட்டு தொந்தரவு தரும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை தேவை. வாக னத்தில் மித வேகம் பின்பற்றவும்.

ரிஷபம் : புதிய நம்பிக்கை ஏற்படும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியா பாரத்தில் இலக்கு எளிதில் பூர்த்தியாகும். நிலுவைப் பணம் வசூலாகும். விலகிச் சென்ற உறவினர் சொந்தம் பாராட்டுவர். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

மிதுனம் : மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தாமதமான பணிகள் நிறைவடையும். தொழிலில் உற்பத்தி விற்பனை கூடும். வரவு செலவு திருப்திகரமாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கடகம் : எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் நிலுவைப் பணி உடனே நிறைவேற்றுவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பயன்தராத பொருள் வாங்க வேண் டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

சிம்மம் : சூழல் உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். வரவு, செலவில் பாதுகாப்பு பின்பற்றவும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். சீரான ஓய்வு ஆரோக்கியம் காக்கும்.

கன்னி : திட்டமிட்ட செயல்கள நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க தகுந்த மாற்றம் செய்வீர்கள். கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

துலாம் : முக்கியமான பணி அவசரகதியில் நிறைவேறும். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். பணவரவு சிக்கன செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்

விருச்சிகம் :பணித்திறனை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

தனுசு : தகுதி அறிந்த உதவுவது நல்லது. கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். பணவரவு மந்தமமாக இருக்கும். குடும்ப செலவு அதிரிக்கலாம். போக்குவரத்தில் கவனம் பின்பற்ற வேண்டும்.

மகரம் : கருணை மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி மேற் கொளவீர்கள். சத்தான உணவு ஆரோக்கியம் காக்கும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பது நல்லது.

கும்பம் : கடந்த கால நற்செயலுக்கான நன்மை கிடைக்கும். புதியவர்கள் அன்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வரவு, செலவில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு அனுகூலம் ஏற்படும்.

மீனம் : முக்கியமான பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். புதிய வழிகளில் பணச்செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தியானம், வழிபாடு மனதில் அமைதியை தரும்.

 

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: