Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 17/11/2018

இன்றைய நாள் எப்படி 17/11/2018

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 1ம் தேதி, ரபியுல் அவ்வல் 8ம் தேதி,
17.11.18 சனிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 10:21 வரை;
அதன்பின் தசமி திதி, சதயம் நட்சத்திரம் மதியம் 1:39 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், அமிர்த–மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
பொது : ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா, சனீஸ்வரர் வழிபாடு, கரிநாள்

மேஷம்: பேச்சு, செயலில் சமயோசிதம் நிறைந்திருக்கும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் உபரி வருமானம் கிடைக்கும்.உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்: உற்சாக மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி எளிதாக நிறைவேறும்.ஆதாயம் உயரும். பணியாளர்கள் சலுகை பெறுவர். வெகுநாள் வாங்க விரும்பிய பொருள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

மிதுனம்: பொறுமையுடன் செயல்படுவது நன்மையளிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். நிர்வாகச் செலவில் சிக்கனம் கடைப்பிடிப்பீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு மறையும். பெண்கள் தாய்வீட்டினரின் அன்பை பெறுவர்.

கடகம்: சிலர் சுயநல நோக்கத்துடன் நெருங்குவர். தொழில், வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் பின்பற்றுவது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும்.

சிம்மம்: சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். உங்களின் தனித்திறமை நண்பர்களிடம் வரவேற்பு பெறும்.தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும்.

கன்னி: உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை சந்திப்பீர்கள். அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும்.

துலாம்: யாருக்கும் தகுதி மீறி வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்யவும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்களுக்கு பேச்சில் நிதானம் தேவை.

விருச்சிகம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். விரிவாக்கப்பணிக்காக கடன் பெறுவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக திகழ்வர்.

தனுசு: அனைவரிடமும் கலகலப்பாக பேசுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான பணஉதவி கிடைக்கும். லாபம் உயரும். பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்ப்பில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும்.

மகரம்: குடும்ப பிரச்னைகளை பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமத்திற்கு ஆளாவர். பெண்கள் உடல்நலக் குறைவால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வர்.

கும்பம்: தியாகம் நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை இஷ்ட தெய்வ அருளால் அதிகரிக்கும்.குடும்பத்தின் முக்கிய தேவை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைககும்.

மீனம்: குடும்பத்தில் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

 

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: