Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 17/08/2018

இன்றைய நாள் எப்படி 17/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 1ம் தேதி, துல்ஹஜ் 5ம் தேதி,
17.8.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி காலை 6:34 வரை;
அதன் பின் சப்தமி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 9:56 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : நரசிம்மர் வழிபாடு.

மேஷம்: மனதில் உற்சாகமும், செயலில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம்: நண்பரிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு.

மிதுனம்: சொந்த பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில் வியாபாரம் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடலாம். தியானம், தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நிம்மதிக்கு வழிவகுக்கும்.

கடகம்: வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். கடின உழைப்பால் தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கலாம். பெண்களுக்கு உடல்நலனில் கவனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

சிம்மம்: நண்பரின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய இலக்கை நோக்கி வெற்றி நடை போடுவீர்கள். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும் பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவற்றுவீர்கள்.

கன்னி: முக்கியமான பணி நிறைவேற தாமதமாகலாம். குடும்பத்தினரிடம் அதிருப்தியுடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை. ஒவ்வாத உணவுவகைகளை தவிர்க்கவும்.

துலாம்: உங்களின் சிறு செயலும் அதிக நன்மையை தரும். உறவினர் செய்த உதவிக்கு கைமாறு செய்து மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். நிலுவைப் பணம் வசூலாகும். பயணத்தால் இனிய அனுபவம் உண்டாகும்.

விருச்சிகம்: எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நேரிடும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி உண்டு. பெற்றோரின் ஆறுதல் பேச்சு நம்பிக்கை தரும்.

தனுசு: பேச்சில் கலகலப்பு மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் கலையம்சம் உள்ள பொருட்களை வாங்குவர்.

விருச்சிகம்: எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நேரிடும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி உண்டு. பெற்றோரின் ஆறுதல் பேச்சு நம்பிக்கை தரும்.

மகரம்: நல்ல எண்ணத்துடன் செயல்படுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கும்பம்: உங்களின் செயலை சிலர் குறை சொல்லலாம். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். திடீர் செலவால் சேமிப்பு கரையும். வீடு, வாகனப் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும்.

மீனம்: சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். குறைந்த அளவில் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மதிப்பது அவசியம். பெண்கள் பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/04/2019

இன்று! விகாரி வருடம், சித்திரை மாதம் 3ம் தேதி, ஷாபான் 10ம் தேதி, 16.4.19, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...

%d bloggers like this: