Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 17/05/2019

இன்றைய நாள் எப்படி 17/05/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி,
17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, நாளை அதிகாலை 4:25 வரை;
அதன்பின் பவுர்ணமி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 3:22 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : நரசிம்ம ஜெயந்தி, மகாலட்சுமி வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம் : மனதில் பெருமித உணர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சி நிலையை கண்டு பிறர் வியப்படைவர். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். நண்பரின் உதவியால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம் : எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகள் தரவேண்டாம். நிதானமான அணுகுமுறை நன்மை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியச் செலவுகளுக்கு பணம் கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.

கடகம் : உங்கள் நற்செயலுக்கான பலன் தேடிவரும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். அக்கம், பக்கத்தவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவர்.

சிம்மம் : திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழிலpல் உற்பத்தி, வியாபாரம் செழிக்கும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கூடுதல் சொத்து வாங்க திட்டமிடுவீர்கள்.

கன்னி : சிலர் உங்களுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பர். செயல்களில் கவனம், தற்காப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.

துலாம் : பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நண்பர், உங்களுக்கு தேவையான உதவியை வழங்குவார். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.

விருச்சிகம் : செயல்களில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

தனுசு : லட்சிய எண்ணத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி திருப்திகரமாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மகரம் : மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நற்செயல் பெருமையை தேடித்தரும்.

கும்பம் : குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியில் நடத்தும். தொழில், வியாபார நடைமுறை சீராகும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

மீனம் : குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னர் செய்த அபிவிருத்தி பணி நல்ல பலன் தர ஆரம்பிக்கும். பணவரவு திருப்திகரமாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: