Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 17/04/2019

இன்றைய நாள் எப்படி 17/04/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 3ம் தேதி, ஷாபான் 10ம் தேதி,
16.4.19, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 11:23 வரை;
அதன் பின் திரயோதசி திதி, பூரம் நட்சத்திரம் இரவு 11:53 வரை;
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
பொது : துர்கை, முருகன் வழிபாடு.

 

மேஷம்: நண்பருக்கு தேவையறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

ரிஷபம்: போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். சுமாரான லாபம் கிடைக்கும். உறவினர் வகையில் செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் பின்பற்றவும்.

மிதுனம்: புதிய நண்பர்களின் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீ்ர்கள். பெண்கள் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு

கடகம்: உங்களின் எதார்த்த பேச்சு சங்கடம் தரலாம். தொழில் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். குறைந்த அளவில் வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

சிம்மம்: அனைவரிடமும் பெருந்தன்மையுடன் பழகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். உபரி பணவரவால் சேமிக்கலாம். பணக்கடனில் ஒரு பகுதி அடைபடும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர்.

கன்னி: உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. நண்பரின் உதவி கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் அதிக பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம்.

துலாம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். பிள்ளைகளால் இனிய அனுபவம் காண்பீர்கள். முக்கியஸ்தரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.

விருச்சிகம்: மனதில் இருந்த கவலை தீரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வளரும்.

தனுசு : மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் தாமத கதியில் இயங்கும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

மகரம்: உறவினரின் பாசத்தால் மனம் நெகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். விரும்பிய உணவு உண்பதில் கட்டுப்பாடு தேவை. வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு பின்பற்றவும்.

கும்பம்: சூழல்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். மிதமான வருமானம் கிடைக்கும். பெண்கள் நிர்பந்தத்தின் பேரில் ஆடம்பர பொருள் வாங்க வேண்டாம். நண்பரால் உதவி உண்டு.

மீனம்: பணியில் நேர்த்தியும் கலை ரசனையும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: