Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 17/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 17/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், தை மாதம் 3ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 21ம் தேதி,
17.1.20 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 11:28 வரை,
அதன் பின் அஷ்டமி திதி, சித்திரை நட்சத்திரம் நாளை அதிகாலை 4:56 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி
ராகு காலம்: காலை 10:30-12:00 மணி
எமகண்டம்: பகல் 3:00-4:30 மணி
குளிகை: காலை 7:31-9:00 மணி
சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி
பொது பைரவர், மகாலட்சுமி வழிபாடு, கரிநாள்

 

மேஷம்: முன்னர் செய்த உதவிக்கு நற்பலன் தேடி வரும். உறவினர்கள் பெருமைப்படுத்துவர்.தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

ரிஷபம்: நிதானித்து செயல்படுவதால் நற்பலன் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.

மிதுனம்: மனதில் பதற்றம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூல தனம் போதும். அதிக உழைப்பால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கடகம்: நண்பருக்கு உதவுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். குடும்பத்தின் முக்கிய தேவை நிறைவேறும். வழக்குகளில் அனுகூலத்தீர்வு கிடைக்கும்.

சிம்மம்: மனதில் குழப்பம் ஏற்படலாம். பிறருக்காக எவ்வித பொறுப்பும் ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சிரமங்களை திறமையுடன் சரிசெய்வீர்கள். சுமாரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எல்லோரிடமும் சாந்த குணத்துடன் பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் தேடியபொருள் புதிய முயற்சியால் கிடைக்கும்.

துலாம்: பொழுது போக்காக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

விருச்சிகம்: நண்பர், உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்துவீர்கள்.

தனுசு: இனிய அணுகுமுறை நற்பலன் தரும். உறவினர், விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து வளரும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம்: செயல்களில் நிதானம் தேவை. தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் பணிபுரிவீர்கள். பணவரவு குறையலாம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். பெண்கள் நகையை இரவலாக வாங்க கூடாது.

கும்பம்: பேச்சு, செயலில் நிதானம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவில் தாமதம் இருக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும். இசையை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

மீனம்: அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். மனதில் புத்துணர்வு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி, 21.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி ...

%d bloggers like this: