Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 16/08/2019

இன்றைய நாள் எப்படி 16/08/2019

மேஷம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். செயல்களில் சாமர்த்தியமாக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானத்தில் சிறு அளவில் தானம் தர்மத்திற்கு செலவு செய்வீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

ரிஷபம் : சந்தோஷ மனத்தினால் பொதுநலப் பணிபுரிவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி எளிதாக நிறைவேறும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.

மிதுனம் : பொறாமையுடன் சிலர் உங்களை குறை சொல்வர். உழைப்பில் கவனம் கொள்வது நல்லபலன் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். குடும்ப செலவுகளில், தாராளம் பின்பற்றுவீர்கள். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : மனதில் ஒருமுகத் தன்மையுடன் பணிபுரிவது அவசியம். தேவையற்ற விவாதம் பேசக் கூடாது. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும்.

சிம்மம் : உறவினர் உதவிகரமாக நடந்து கொள்வர். மனதில், கூடுதல் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு, திட்டமிட்டபடி நிறைவேறும். தாராள பணவரவில் சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கன்னி : உங்களுக்கு எதிராக செயல்பட்டவர், இடம் மாறிப்போவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.

துலாம் : பொது விவகாரங்களில், கருத்து சொல்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியதேவைகளுக்கு மட்டும் பணம் செலவு செய்வீர்கள். தியானம், தெய்வ வழிபாடு செய்வதால், மனதில் புத்துணர்வு உருவாகும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : உங்கள் செயல்களின் விளைவு உணர்ந்து, பணிபுரிவது அவசியம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம். உற்பத்தி, விற்பனை சீராக, கூடுதல் உழைப்பு உதவும். பணச்செலவில், சிக்கனம் பின்பற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர் உதவிகரமாக நடந்து கொள்வர்.

தனுசு : செயல்களில் பொறுமையும், திறமையும் நிறைந்திருக்கும். சமூகத்தில் கூடுதல் வரவேற்பு பெறுவீ;ர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். குடும்ப பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மகரம் : நண்பரின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராகும். பணவரவு, அத்தியாவசிய செலவுக்கு இயந்திரப்பிரிவு பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : உங்கள் செயல்களில் எளிமையும், நிதானமும் நிறைந்திருக்கும். தொழிலில், வளர்ச்சிப் பணி திட்டமிட்டபடி பூர்த்தி செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும்.

மீனம் : உங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு சிரமம் தரலாம். நற்பெயரை பாதுகாப்பது நல்லது. தொழிலில் அபிவிருத்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/09/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 19ம் தேதி, 19.9.19 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: