Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 16/07/2019

இன்றைய நாள் எப்படி 16/07/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி,
16.7.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, பவுர்ணமி திதி இரவு 3:34 வரை
அதன் பின் பிரதமை திதி, பூராடம் நட்சத்திரம் இரவு 9:48 வரை
அதன் பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00-4:30 மணி
எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
குளிகை : பகல் 12:00-1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : பவுர்ணமி கிரிவலம், துர்கை வழிபாடு.

 

மேஷம்: உங்கள் செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

ரிஷபம்: அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை சரிசெய்வது நல்லது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையளிக்கும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிதுனம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு உதவி பெற அனுகூலம் உண்டு.

கடகம்: கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கும். எதிரி தொல்லையை சமயோசிதமாக சரிசெய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் அன்பை பெறுவர்.

சிம்மம்: எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். சுபவிஷயத்தில் முயற்சிக்கான பலன் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். பெண்கள் சிக்கனமாக செலவு செய்வர். உடல்நிலை சீராக இருக்கும்.

கன்னி: வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படலாம். .தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் உடல்நலனில் அக்கறை கொள்வர். அறிமுகமில்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம்: கடந்த கால உழைப்புக்கான நன்மை தேடி வரும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக நேரம் பணிபுரிவீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். அக்கம் பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பெண்கள் கணவரின் சொல்லை மதித்து நடப்பர்.

விருச்சிகம்: குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் கூடுதல் காலஅவகாசத்தில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறுக்கிடும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். பிள்ளைகளால் உதவி உண்டு.

தனுசு: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி வருமானம் சேமிக்க உதவும். பெண்கள் வீட்டுத் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவர். ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்: எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். முக்கியச் செலவுக்காக சேமிப்பு பணம் கரையும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம்: குடும்பத் தேவைகள் குறையின்றி நிறைவறும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.தொழில், வியாபார வளர்ச்சி கண்டு மற்றவர் வியப்படைவர். இயன்ற அளவில் அறப்பணியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் விருந்து, விழாவில் பங்கேற்பர்.

மீனம்: மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

 அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 07/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 21ம் தேதி, ரபியுல் ஆகிர் 9ம் தேதி, 7.12.19 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: